எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத 5 படங்கள்: மோசமான விடியலால் வெடவெடக்கச்செய்யும் க்ளைமாக்ஸ்!

Best 5 Movies: சில படங்கள் மட்டும் தான் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது என்று சொல்வதற்கு ஏற்ப காட்சிகள் விறுவிறுப்பாகவும், பார்ப்பதற்கு ஆர்வமாகவும் இருக்கும். அந்த வகையில் இந்த தொகுப்பில் பார்க்கக் கூடிய சில படங்கள் ஒரு தடவை மட்டும் பார்த்ததோடு இல்லாமல் பலமுறை பார்க்க வைக்கும் அளவிற்கு மக்களின் பேவரைட் படமாக இடம் பிடித்திருக்கிறது. அந்த படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

சதுரங்க வேட்டை: எச் வினோத் இயக்கத்தில் நடராஜன், இஷாரா நாயர், இளவரசு நடிப்பில் 2014 ஆம் ஆண்டு சதுரங்க வேட்டை திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதையானது ஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு, ரைஸ் புல்லிங் போன்ற மக்களை ஏமாற்றும் நபர்களின் புத்திசாலிகளை வைத்து, ஆசையில் ஏமாறும் சாமானிய மக்களின் நிலைமையை எடுத்து சொல்லும் விதமாக இருக்கும். அந்த வகையில் மக்களின் பேராசையை தூண்டி அவர்களை மோசடி வலையில் விழ வைக்கிறது என்பதன் கதை.

குற்றத்தை ஒத்துக்க சொல்லி அதிகாரம் பண்ணிய சம்பவம்

துப்பறிவாளன்: மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா நடிப்பில் 2017 ஆம் ஆண்டு துப்பறிவாளன் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதை ஆனது விஷால் ஒரு தனியார் துப்பறிவாளன். இவருடைய நெருங்கிய நண்பர் பிரசன்னா. தன் திறமைக்கேற்ற வழக்குக்காக காத்திருக்கும் விஷாலைத் தேடி ஒரு கேஸ் வருகிறது. ஒரு நாய் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு. அதை விசாரிக்கத் தொடங்கும்போது, பணத்துக்காக ஆட்களைக் கொல்லும் ஒரு பயங்கர கும்பலிடம் போய் நிற்கிறது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு விஷயங்களும் சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகளுடன் அமைந்திருக்கும்.

விசாரணை: வெற்றிமாறன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஆனந்தி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு விசாரணை திரைப்படம் வெளிவந்தது. அதிகார வர்க்கத்தின் அடியாளாக இயங்கும் காவல் துறையின் மனசாட்சியை விற்று விட்டு ‘விசாரணை’ நடக்கிறது. அதாவது தினேஷ், மற்ற மூன்று நண்பர்களுடன் ஆந்திராவில் ஒரு மளிகைக்கடையில் வேலைபார்க்கிறார். இந்த நான்கு பேருமே இரவுகளில் பூங்காவில் தூங்கிக் கொண்டு வயிற்றுப் பிழைப்புகளை நடத்தி வருகிறார்கள். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக நடந்த மோசமான சம்பவம் தான் மொத்த கதையும் வெடவெடக்கச்செய்யும்.

உன்னை போல் ஒருவன்: சக்ரி டோலேட்டி இயக்கத்தில் கமல், மோகன்லால் நடிப்பில் உன்னை போல் ஒருவன் திரைப்படம் 2009 ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்தின் கதையானது வீட்டுக்கு காய்கறி வாங்கிட்டு போகும் பொழுது பையிலிருந்து கீழே விழுந்த தக்காளியை கூட விடாமல் பொறுக்கிக் கொண்டு போகும் ஒரு சாதாரண குடும்பஸ்தர். சென்னையின் ஐந்து, ஆறு இடங்களில் பாம் வைத்துவிட்டு, கமிஷனருக்கு போன் பண்ணுகிறார். நான்கு தீவிரவாதிகளை விடுவிக்காவிட்டால், அமைதி பூங்காவான தமிழ்நாடு கந்தர்கோளமாகிவிடும் என்று. அப்போது சூடு பிடிக்கும் கதை, படம் முடியும் வரை குறையவேயில்லை.

அஞ்சாதே: மிஸ்கின் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு பிரசன்னா, நரேன், அஜ்மல் நடிப்பில் அஞ்சாதே திரைப்படம் வெளிவந்தது. போலீஸ் வேலையே லட்சியம் என வாழ்பவர் ஒருவர், பொறுக்கித்தனமாக ஊர் சுற்றும் ஒருவர் என இரு நண்பர்களின் வாழ்க்கைப் பாதையை, காலமும் ஒரு பெண்கள் கடத்தும் கும்பலும் புரட்டிபோடுவது தான் கதை. அந்த வகையில் சத்தமே இல்லாமல் ஆடியன்ஸை கவர்ந்த ஒரு வெற்றி படம்.

Trending News

- Advertisement -spot_img