வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

2022-ல் பரபரப்பை கிளப்பி மொக்கை வாங்கிய 5 படங்கள்.. அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட தி லெஜன்ட்

தமிழ் சினிமாவில் இந்த வருடம் நம் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்தது. ஆனால் அந்த திரைப்படங்கள் எல்லாம் வசூல் சாதனை நடத்தியதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் எதிர்பார்ப்பை கிளப்பி நம்மை ஏமாற்றிய ஐந்து திரைப்படங்களை பற்றி இங்கு காண்போம்.

தி லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் என்னும் சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்த அருள் சரவணன் திடீரென ஹீரோ அவதாரம் எடுத்தார். இந்த அறிவிப்பே பலராலும் கலாய்க்கப்பட்டது. ஆனாலும் சோர்ந்து போகாத அண்ணாச்சி காசை வாரி இறைத்து தி லெஜன்ட் என்ற படத்தை தயாரித்து நடித்திருந்தார். மிகப்பெரிய அளவில் ப்ரமோஷன் செய்யப்பட்ட அந்தத் திரைப்படம் வெளியான போது பலராலும் ட்ரோல் செய்யப்பட்டது. ஆனாலும் அண்ணாச்சி ஓரளவுக்கு போட்ட காசை எடுத்து விட்டார்.

Also read : 2022 ஐ அதிர வைத்த 6 சம்பவங்கள்.. வருஷ தொடக்கத்திலே ஷாக் கொடுத்த தனுஷ்

மாறன் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான இந்த திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் வெளியான பிறகு இது ரசிகர்களை கவர தவறியது. தனுஷ் ஏன் இப்படி ஒரு படத்தில் நடித்தார் என்னும் அளவுக்கு பல விமர்சனங்கள் வெளிவந்தது.

கோப்ரா அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி செட்டி நடிப்பில் இப்படம் சமீபத்தில் வெளிவந்தது. பல வருடங்களாக எடுக்கப்பட்ட இந்த படம் சில பல தடைகளை தாண்டி வெளியானது. மேலும் படத்தில் விக்ரம் பல கெட்டப்புகளில் வருவதால் அதிக எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் படம் வெளியான பிறகு பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தவில்லை. அந்த வகையில் 100 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெறும் 40 கோடி ரூபாய் மட்டும் தான் வசூலித்தது.

Also read : தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போன 5 படங்கள்.. பாலுமகேந்திராவால் ஏற்பட்ட பெரிய மாற்றம்

கேப்டன் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா, ஐஸ்வர்யா லட்சுமி, சிம்ரன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். ஹாலிவுட் தரத்திற்கு எடுக்கப்பட்ட இந்த படத்தின் ட்ரெய்லர் அனைவரையும் கவர்ந்தது. ஆனால் படம் வெளியான பிறகு இதெல்லாம் ஒரு கதையா என்று பலராலும் கலாய்க்கப்பட்டது. அந்த வகையில் இப்படம் மோசமான தோல்வியை தழுவியது.

பிரின்ஸ் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியானது. பரபரப்பாக ப்ரமோஷன் செய்யப்பட்ட இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதிலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் படுதோல்வி அடைந்த சீமராஜாவை விட இந்த படம் படு மொக்கை என்ற ரீதியில் கலாய்க்கப்பட்டது.

Also read : 2022ஆம் ஆண்டு வெளியான ஐந்து ‘A’ சர்டிபிகேட் படங்கள்.. சென்சார் போர்டை குஜால் ஆக்கிய பார்த்திபன்

Trending News