வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

2023ல் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இந்திய சினிமாவை மிரட்டி விடப் போகும் 5 படங்கள்.. போட்டி வேண்டாம் என விலகிய கமல்

ஒரு படம் ஹிட்டாகி விட்டது என்பதை அதன் பாக்ஸ் ஆபிஸ் கொண்டே உறுதி செய்யப்படுகிறது. படத்திற்கு போடப்படும் பட்ஜெட்டை விட இரு மடங்கு லாபத்தை ஈட்டினால் தான் அப்படம் கமர்சியல் ஹிட் கொடுத்தது என்று கருதப்படும்.

அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் பல படங்கள் வசூல் வேட்டையில் இடம் பெற்றுள்ளது. மேலும் தற்பொழுது 2023ல் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இந்திய சினிமாவை மிரட்டி விட போகும் ஐந்து படங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

Also Read:அண்ணாத்த படம் நாசமாய் போனதற்கு காரணம் இவங்கதான்.. சர்ச்சையை கிளப்பி விட்ட பிரபலம்

துணிவு: பொங்கல் விடுமுறையை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட ஆக்சன் படம் தான் துணிவு. அஜித், மஞ்சுவாரியர் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் சிறப்பாக நடித்து மிகப்பெரிய ஹிட் கொடுத்தனர். மேலும் இதன் பட்ஜெட்டாக பார்க்கையில் 180 கோடியும் அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இருமடங்கு லாபமாக 360 கோடியை பெற்றும் கமர்சியல் ஹிட் கொடுத்தது. இருப்பினும் இப்படம் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

ஜெயிலர்: நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் தான் ஜெயிலர். இந்த வருட இறுதிக்குள் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்துக்கு பிறகு இப்படம் பெரிய வசூலை அள்ளிச் செல்லும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. இதன் பட்ஜெட் ஆக பார்க்கையில் சுமார் 200 கோடிக்கு இப்படத்தின் தயாரிப்பு நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் அதிகம் எதிர்பார்க்கும் பட்டியலில் இது நான்காவது இடத்தில் இருந்து வருகிறது.

Also Read:பழிதீர்க்கும் வெறியோடு ரஜினி.. இணையத்தை மிரட்டும் நெல்சனின் ஜெயிலர் பட போஸ்டர்

வாரிசு: விஜய்யின் பேமிலி என்டர்டைன்மென்ட் படங்களில் வாரிசும் ஒன்று. இப்படம் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பை பெற்று தந்தது. மேலும் இப்படத்தின் பட்ஜெட் ஆக பார்க்கையில் 200 கோடி செலவிடப்பட்டது. மேலும் அதன் பாக்ஸ் ஆபிஸில் 300 கோடி வசூலை பெற்று பெரிய லாபத்தை ஈட்டியது. இத்தகைய சிறப்புகளுடன் உள்ள இப்படம் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

பொன்னியின் செல்வன் 2: வரலாற்று தொகுப்பான இப்படத்தின் பாகம் ஒன்று அதிக வசூலை பெற்றுத் தந்தது. இதன் இரண்டு பாகங்களின் தயாரிப்பும் சுமார் 500 கோடியை சென்றடைந்தது. ஆனால் பாக்ஸ் ஆபீஸ் வசூலை பொறுத்தவரை பாகம் ஒன்றே 500 கோடியை வசூலித்தது. மேலும் தற்பொழுது பாகம் 2 வெளிவந்து மூன்று நாட்களிலேயே சுமார் 150 கோடி வசூலை பெற்றுள்ளது. இன்னும் கோடை விடுமுறையை தொடர்ந்து இதன் வசூல் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது. தற்போது வரை பாக்ஸ் ஆபிஸில் இப்படம் இரண்டாவது இடத்தை பிடித்து வருகிறது.

Also Read:விஜய்யுடன் கர்ஜிக்க மட்டும் 15 கோடியா.? தலை சுற்ற வைக்கும் லோகேஷின் மாஸ்டர் பிளான்

லியோ: விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டு செய்யும் விதமாக அமைந்த படம் தான் லியோ. இதன் டைட்டில் டீசர் வெளிவந்த நிலையில் அதன் வசூலே பல கோடி பெற்றது. இதன் பட்ஜெட் ஆக பார்வையில் சுமார் 300 கோடியில் இதன் பட தயாரிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் இதன் ஓடிடி உரிமையை சுமார் 400 கோடி கொடுத்து நெட்பிளிக்ஸ் வாங்கி இருக்கிறதாம். இத்தகைய எதிர்பார்ப்பை முன் வைக்கும் விதமாக இப்படம் பாக்ஸ் ஆபீஸ் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து வருகிறது. இதைத்தொடர்ந்து ரசிகர்கள் கண் கொத்தி பாம்பாக இப்படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து இருக்கின்றனர்.

மேலும் இந்த வருடம் வெளியாக இருந்த கமலின் இந்தியன் 2 படம் சில காரணங்களால் தாமதிக்கப்பட்டுள்ளது. இதனை காரணம் காட்டி போட்டியே வேண்டாம் என்று விலகி இருக்கிறார் கமல்.

Also Read:இணையத்தில் ட்ரெண்டாகும் ஏகே 62 டைட்டில் போஸ்டர்.. கொண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த லைக்கா

Trending News