வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சித்தார்த்தின் டக்கரான நடிப்பில் வெளிவர உள்ள 5 படங்கள்.. கமலுடன் போட்ட மாஸ் கூட்டணி

பன்முகத் திறமை கொண்ட சித்தார்த் தன் முதல் படத்திலேயே கதாநாயகனாகவும் மற்றும் உதவி இயக்குனர் ஆகவும் செயல்பட்டார். இருப்பினும் குறிப்பிட்ட படங்களை தவிர்த்து மற்ற படங்கள் பெரிதும் பேசப்படாத நிலையில் தற்பொழுது அடுத்தடுத்த படங்களில் கால்ஷீட் கொடுத்து வருகிறார்.

இவரின் படைப்புகளில் பாய்ஸ், ஜிகர்தண்டா, காவியத்தலைவன் ஆகிய படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இவர் தற்பொழுது தன்னுடைய அடுத்தக்கட்ட படங்களில் பிசியாக இருந்து வருகிறார். மேலும் இவர் நடிக்க இருக்கும் 5 படங்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read: மொத்தத்தையும் அஜித்திடம் புட்டு புட்டுவைத்த லைக்கா.. இடியாப்ப சிக்கலால் தத்தளிக்கும் விடா முயற்சி

டக்கர்: கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் தான் டக்கர். இப்படத்தில் அபிமன்யு சிங், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் முழுக்க பணத்தை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இப்படம் இம்மாதம் 9 ஆம் தேதி வெளியாகிறது.

இந்தியன் 2: சங்கர் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் உருவாகும் படம் தான் இந்தியன் 2. இப்படத்தில் சித்தார்த் சப்போர்ட்டிங் ரோலில் இடம் பெறுகிறார். பல எதிர்பார்ப்புகளோடு அமைய இருக்கும் இப்படத்தில் இவரின் நடிப்பு கூடுதல் வெற்றியை பெற்று தரும் என அவர் எதிர்பார்த்து வருகிறார்.

Also Read: கிணத்துல போட்ட கல் போல் ஆன திரிஷா பொழப்பு.. கணவாய் போன கட்டிய கோட்டை

டெஸ்ட்: எஸ் சஷிகாந்த் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் தான் டெஸ்ட். இப்படத்தில் மாதவன், சித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாக இருக்கும் இப்படம் பல எதிர்பார்ப்புகளை பெற்று வருகிறது. மேலும் இப்படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என அறிவிப்பு வந்துள்ளது.

சித்தா: அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் தான் சித்தா. இப்படத்தில் புது முகமாக சஹஷ்ரா குழந்தை நட்சத்திரமாக இடம் பெறுகிறார். இப்படம் சித்தப்பாவின் உறவை வெளிப்படுத்தும் விதமாக கதை அமைந்திருக்கிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இம்மாதம் வெளியாகும் என அறிவிப்பு வந்துள்ளது.

Also Read: நிற்கக் கூட நேரமில்லாமல் பிஸியாக நடிக்கும் கமலின் 4 படங்கள்.. கொட்டும் பணமழை

சைத்தான் கே பச்சா: கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ஆக்சன் மட்டும் நகைச்சுவை நிறைந்த படம் தான் சைத்தான் கே பச்சா. இப்படத்தில் சித்தார்த் உடன் ராசி கண்ணா ஜோடி ஆக நடித்திருக்கிறார். 90 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இப்படத்தின் கூடுதல் சிறப்பாக தம்பி ராமையா, யோகி பாபு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Trending News