வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

நடிகர்களுக்கு லவ் ஃபெயிலியர் ஆன 5 படங்கள்.. விஜய் கிளைமாக்ஸ் இல் நொறுங்கிப் போன அந்த படம்

சினிமா பொருத்தவரை எந்த படமாக இருந்தாலும் நடிகர் நடிகைகளின் காதலை மையமாக வைத்து கண்டிப்பாக இருக்கும். ஆனால் சில படங்களில் நடிகர்கள் என்ன தான் உருகி உருகி காதலித்தாலும் அவர்களின் காதல் கைகூடாமல் ஃபெயிலியர் ஆயிருக்கும். அப்படிப்பட்ட நடிகர்களின் காதல் தோல்வியான படங்களை பற்றி பார்க்கலாம்.

இயற்கை: எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு இயற்கை திரைப்படம் வெளிவந்தது. இதில் ஷியாம், அருண் விஜய், குட்டி ராதிகா, கருணாஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ஷியாம் அவரிடம் வந்த காதலை எத்தனையோ முறை குட்டி ராதிகா விடம் வெளிப்படுத்தி இருந்தாலும் அவர் கேப்டன் அருண் விஜய்க்காக காத்திருப்பார். கடைசி நேரத்தில் ஷியாம் மற்றும் குட்டி ராதிகாவின் காதல் கைகொடும் நேரத்தில் அதற்கு தடையாக அருண் விஜய் வந்ததால் இவருடைய காதல் ஒன் சைடாவே போய்விடும். இப்படம் 90ஸ் கிட்ஸ்க்கு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

Also read: தனக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்த தக்காளி சட்னியா.. கங்குவா படப்பிடிப்பில் சூர்யா செய்யும் அலப்பறை

மௌனம் பேசியதே: அமீர் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே திரைப்படம் வெளிவந்தது. இதில் சூர்யா, த்ரிஷா, நந்தா மற்றும் லைலா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் பொண்ணுங்களையும் காதலையும் அறவே பிடிக்காத சூர்யாவுக்கு முதல்முறையாக திரிசா மேல் ஆசை வந்து காதலே சொல்லலாம் என்று போகும் போது த்ரிஷா அவருடைய காதலனை அறிமுகப்படுத்தி ஷாக் கொடுத்திருப்பார். கடைசியில் இவருடைய காதல் ஒன் சைடாவே போய்விடும்.

உன்னை நினைத்து: விக்ரமன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு உன்னை நினைத்து திரைப்படம் வெளிவந்தது. இதில் சூர்யா, சினேகா, லைலா, ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சூர்யாவும் லைலாவும் ஒருவரை ஒருவர் காதலித்து இருப்பார்கள். ஆனால் இவரை விட வசதியான மாப்பிள்ளை வந்ததும் லைலா அவரைத் தேடி போய் விடுவார். கடைசியில் சூர்யாவின் காதல் தோற்றுப் போனதாக ஆகிவிடும்.

Also read: இரட்டை கதாநாயகர்களாக அஜித் நடித்த 5 படங்கள்.. ஆக்சன் கிங்க்கு இணையாய் நின்ற அஜித்

பூவே உனக்காக: விக்ரமன் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு பூவே உனக்காக திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், சங்கீதா, அஞ்சு அரவிந்த், சார்லி, எம் என் நம்பியார், நாகேஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய் உருகி உருகி அஞ்சு அரவிந்தை காதலித்திருப்பார். இவரும் தன்னை தான் காதலிக்கிறார் என்று நினைத்து இருக்கும் போது திடீரென்று அவர் வேறு ஒருவரை காட்டி இவரை நான் காதலிக்கிறேன் என்று சொல்லிவிடுவார். கடைசியில் விஜய்யை அந்த காதலை சேர்த்து வைக்கும் படியாக இவருடைய நிலைமை மாறிவிடும். பிறகு இவரின் காதலை மனதுக்குள்ளே பூட்டி வைத்து விடுவார்.

ஷாஜகான்: இயக்குனர் ரவி இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு ஷாஜகான் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், ரிச்சா பலோட், விவேக், கோவை சரளா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய் உண்மையான காதலுக்கு தன் உயிரை கொடுத்தாவது அந்த காதலை சேர்த்து வைக்கும் கேரக்டரில் நடித்தார். ஆனால் இவருடைய காதலை ஒன் சைடு ஆகவே வைத்து கடைசியில் தன்னுடைய நண்பரின் காதலி என்று தெரிந்ததும் அதற்கு தானும் ஒரு காரணம் அப்படின்னு தெரிந்த பிறகு அந்த ஸ்பாட்டிலே நொறுங்கிப் போய் இருப்பார்.

Also read: நல்லா போய்க் கொண்டிருக்கும் போது மொக்கை பண்ணிய விஜய் ஆண்டனி.. கடும் நஷ்டத்தை கொடுத்த 5 படங்கள்

Trending News