வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நேருக்கு நேராக ரஜினி, கமல் மோதி தெறிக்கவிட்ட 5 படங்கள்.. 890 நாட்கள் திரையில் மிரள விட்ட சூப்பர் ஸ்டார்

Kamal-Rajini: தன் திறமையை கொண்டு மூத்த நடிகராய் இன்றும் வலம் வந்து கொண்டிருக்கும் பிரபலங்கள் தான் ரஜினி மற்றும் கமல். இந்நிலையில் ஒரே காலகட்டத்தில் இவர்களின் படங்கள் வெளிவந்து, ரசிகர்களை திக்கு முக்காட வைத்த சம்பவம் குறித்த தகவலை இத்தொகுப்பில் காணலாம்.

அக்காலத்திலேயே இருவரும் தனக்கான நடிப்பினை வெளிகாட்டி, தனித்தனியே ரசிகர் கூட்டம் வைத்திருக்கும் நிலையில், பண்டிகை நாளன்று போட்டோ போட்டியாய் இவர்களின் படங்கள் வெளியானது. இவற்றுள் அதிக நாள் திரையில் ஓடி வெற்றி கண்ட படங்களை இங்கு பார்க்கலாம்.

Also Read: காலில் விழுந்ததை தவறாக சித்தரித்தாலும் வசூலில் வெளுத்து வாங்கும் ஜெயிலர்.. தனிக்காட்டு ராஜாவாக ஜெயித்த ரஜினி

1983 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரபலங்கள் ஆன ரஜினி மற்றும் கமலின் படம் ஒன்றாக வெளியானது. அவற்றில் கமலின் தூங்காதே தம்பி தூங்காதே படம் வெளியாகி சுமார் 175 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றியாய் அமைந்தது. இருப்பினும் அதற்கு போட்டியாய் ரஜினியின் தங்க மகன் 100 நாட்கள் ஓடி சுமாரான வெற்றியை பெற்றது.

அதைத் தொடர்ந்து 1984 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த நல்லவனுக்கு நல்லவன் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று 150 நாட்கள் ஓடி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. கமலின் எனக்குள் ஒருவன் படம் 100 நாட்கள் ஓடியதாக கூறப்படுகிறது. மேலும் 1985 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கமல் நடிப்பில் வெளியான காக்கிச்சட்டை படத்திற்கு போட்டியாய் ரஜினியின் சிகப்பு மனிதன் வெளியானது.

Also Read: டீன் ஏஜ் பெண்ணாக மாறிய வனிதாவின் மகள்.. கண் சிமிட்டாமல் பார்க்க வைக்கும் புகைப்படம்

இதில் கமலின் படம் நல்ல விமர்சனங்களோடு பட்டைய கிளப்பி 150 நாட்கள் ஓடி வெள்ளி விழா கண்டது. ரஜினியின் சிகப்பு மனிதனுக்கும் நல்ல வரவேற்பு இருந்தும் 100 நாட்களே ஓடியது. 1986ல் போட்டோ போட்டியாய் வெளியான படிக்காதவன் மற்றும் ஜப்பானின் கல்யாணராமன் படங்களில், ரஜினி படம் 235 நாட்கள் ஓடி முத்திரை பதித்தது. ஆனால் கமலின் படம் போதிய வரவேற்பு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1991 ஆம் ஆண்டு ஒரே காலகட்டத்தில் வெளியான தளபதி மற்றும் குணா படத்திற்கு வரவேற்பு இருந்து வந்த நிலையில், ரஜினி படமே 150 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. கமலின் குணா படம் பாராட்டை பெற்றிருந்தாலும் போதிய வசூலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து தேவர் மகன் மற்றும் பாண்டியன் ஒரே காலகட்டத்தில் வெளியானது இருப்பினும் இரண்டும் திரையில் 100 நாட்கள் ஓடியது. கடைசியாக 2005ல் புத்தாண்டை ஒட்டி வெளியான சந்திரமுகி சுமார் 890 நாட்கள் ஓடி மிரள விட்டது என்றே கூறலாம். ஆனால் கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படுதோல்வியை அடைந்தது.

Also Read: கே டி குஞ்சுமோன் அறிமுகப்படுத்தி புகழை சம்பாதித்த 5 பிரபலங்கள்.. 175 நாட்கள் ஓடி கலெக்ஷன் பார்த்த அர்ஜுன்

Trending News