வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சமீபத்தில் பெரிய ஹீரோக்கள் கொடுத்த 5 மொக்கைப் படங்கள்.. மகனுடன் ஓவர் பில்டப் கொடுத்தும் செல்லுபடியாகாத மகான்

சமீபத்தில் டாப் ஹீரோக்கள் நடிப்பில் வெளியான 5 படங்கள் படு மொக்கை படமாக மாறியது. அதிலும் மகனுடன் ஓவர் பில்டப் கொடுத்த விக்ரமின் மகான் திரைப்படம் ரசிகர்களிடம் செல்லுபடி ஆகாமல் போனது.

விருமன்: இந்த வருடம் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசான இந்த படம் ரசிகர்களின் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாக இருந்தது. ஆனால் கடைசியில் படத்தில் எந்தவித விறுவிறுப்பும் இல்லாமல் ஏற்கனவே கார்த்தி நடிப்பில் வெளியான கொம்பன் படத்தைப் போன்றே குடும்பப் பகையை வைத்து படமாக்கி இருப்பார்கள்.

இந்தப் படத்தில் மூலம் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த படத்திற்காக ப்ரோமோஷன் வேலைகள் ஆஹா ஓஹோன்னு நடந்தாலும் கடைசியில் படம் புஸ்ஸு ஆனது.

Also Read: விக்ரமை துரத்தியடித்த 6 தோல்வி படங்கள்.. கோடிக்கணக்கில் நஷ்டம், நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்

நானே வருவேன்: செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான நானே வருவேன் படம் அதிரடி திரில்லர் படமாக இருந்தது. இதில் தனுஷ் அண்ணன் தம்பியாக ஹீரோ மற்றும் வில்லன் என்ற இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். இந்தப் படத்தில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டி இருக்க வேண்டும் என ரசிகர்கள் தரப்பில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.

மகான்: நடிகர் விக்ரம் மற்றும் அவரின் மகனும், நடிகருமான துருவ் விக்ரம், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மகான் திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். ஓடிடியில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. விக்ரமின் சுருக்கமான முகம், அவரது வயதை எட்டிப்பார்க்க வைத்த நிலையில், இத்திரைப்படத்தில் அவரை ரசிக்கும் படி அமையவில்லை என்பதே உண்மை.

Also Read: கிராமிய மணம் வீசும் 7 படங்கள்.. கொம்பன் கார்த்திக்கு 2 ஹிட் கொடுத்த முத்தையா

டிஎஸ்பி: இந்த மாதம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான டிஎஸ்பி படத்தில் அவருடன் அனு கீர்த்தி, விஜய் டிவி புகழ், சிவானி உள்ளிட்டோர் இணைந்து நடித்திருப்பார்கள் இந்தப் படத்தை பார்த்த பலரும் படு மொக்கையாக இருக்கிறது விமர்சித்தனர்.  மேலும் இந்த படம் காலம் காலமாக தமிழ் சினிமாவில் காட்டப்பட்டு வந்த போலீஸ், ரவுடி கதைதான் இந்த படத்தின் கதையும். விக்ரம் படத்தில் சந்தனம் கதாபாத்திரத்திற்கு பிறகு விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது.

லத்தி: சண்டக்கோழி 2, ஆக்சன், அயோக்கியா போன்ற தொடர் 6 தோல்வி படங்களை கொடுத்த விஷால் நீண்ட வருடங்களாக படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் படாத பாடுபட்டு ஒரு வழியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு லத்தி படத்தை ரிலீஸ் செய்து அந்தப் படத்தையும் தோல்வி பட லிஸ்ட்க்கு சேர்த்து விட்டார். இனிமேல் படத்தில் நடிப்பதை விட்டுவிட்டு இயக்குனராக மாறிவிடலாம் என்ற முடிவில் அவரே அடுத்து நடித்து இயக்கி தயாரிக்கும் துப்பறிவாளன் 2 படத்தை முடித்த கையோடு, விஜய்க்கும் கதை தயாரிக்கிறாராம்.

Also Read: கீழ விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டல.. 6 ஃப்ளாப் கொடுத்துவிட்டு விஷாலின் ஆணவ பேச்சு

இவ்வாறு இந்த 5 படங்களும் டாப் ஹீரோக்கள் நடிப்பில் வெளியான 5 மொக்கை படங்களாகும். அதிலும் மகனுடன் விக்ரம் சேர்ந்து நடித்த மகான் திரைப்படம் எதிர்பார்த்ததை விட படு தோல்வியை சந்தித்தது.

Trending News