திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அடுத்த வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் 5 படங்கள்.. பல வருடங்களாக காத்து கிடக்கும் அயலான்

சினிமாவில் தன்னுடைய திறமை மற்றும் கடின உழைப்பு மூலம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னணி இடத்தை பிடித்த நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். அதிலும் குறுகிய காலகட்டத்தில் தனக்கென ஒரு இடத்தை அவர் பிடித்திருப்பது முன்னணி நடிகர்களையே கொஞ்சம் அசைத்து தான் பார்த்துள்ளது. இந்நிலையில் அடுத்த வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்த ரிலீஸ் ஆகும் 5 படங்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது

ஏற்கனவே இவர் நடிப்பில் வெளியான டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் 100 கோடி வரை வசூலித்து அவரை ஒரு பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாக மாற்றியது. அதனாலேயே அவர் நடிப்பில் உருவான பிரின்ஸ் திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில் பிரின்ஸ் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது பலருக்கும் அதிர்ச்சி தான்.

Also Read: சிவகார்த்திகேயனின் ரோல் மாடல் யாரு தெரியுமா.! அவரின் அசுர வளர்ச்சிக்கு அடித்தளமே இவர்தானாம்

அதுவும் அப்படம் பார்க்கும் ரகமாக இருந்தும் கூட படு மொக்கை என்ற ரேஞ்சுக்கு கருத்துக்கள் பரவியது. இதனைப் போக்கும் விதத்தில் அடுத்தடுத்த படங்களில் தவறுகளை சரி செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக செயல்படுகிறார். இதனால் தற்போது ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் அயலான் படம் அடுத்த வருடம் வெளியாக உள்ளது.

இதில் சிவகார்த்திகேயன் ஒரு விவசாயி கெட்டப்பில் வேற்றுகிரக வாசியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா உள்ளிட்டவர்களும் இணைந்து நடக்கின்றனர். பல வருடங்களாக ரிலீசுக்கு காத்திருக்கும் இந்த படம் நிச்சயம் அடுத்த வருடம் திரைக்கு வரும் என்று நம்பப்படுகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்கும் மாவீரன் படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இதில் மிஷ்கின் வில்லனாக களமிறங்கி உள்ளார். இதில் சிவகார்த்திகேயன் ஒரு கார்ட்டூனிஸ்ட் ஆக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு அவர் எந்த மாதிரியான கார்ட்டூன் வரைந்தாலும் அது அப்படியே அவருடைய நிஜ வாழ்க்கையில் தோன்றி விடுவது போல் இந்த படத்தின் கதையை அமர்ந்திருக்கின்றனர்.

Also Read: எங்களுக்கு தோண்டிய குழியில நீயே விழுந்துட்ட.. மேடையில் சிவகார்த்திகேயனை வறுத்தெடுத்த தயாரிப்பாளர்

ஆகையால் இந்த படத்தை குறித்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதைத்தொடர்ந்து மூன்றாவதாக சிவகார்த்திகேயன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமலஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் கமிட்டாகி இருக்கிறார்.

அதன்பின் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் படத்திலும் சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார். இதன் தொடர்ச்சியாக மான் கராத்தே படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இயக்குனர் அருண் ராஜா காமராஜ் படத்திலும் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.

இவ்வாறு பிரின்ஸ் படத்திற்குப் பிறகு அடுத்த ஆண்டு சினிமா கிரியரில் விட்டதை எல்லாம் தட்டி தூக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் இந்த 5 படங்களின் லிஸ்ட் தற்போது இணையத்தில் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: 2 மடங்கு சம்பளம் கேட்ட சிவகார்த்திகேயன் பட இயக்குனர்.. பழம் நழுவி வாயில் விழுந்தும் புண்ணியம் இல்ல

Trending News