வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அழகு இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாததால் காணாமல் போன 5 வாரிசு நடிகைகள்.. அஜித் மச்சினிக்கு அமையாத பட வாய்ப்பு

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் வாரிசு நடிகைகளுக்கு சற்று மவுசு அதிகம். ஏனென்றால் அவர்களின் முதல் படத்திலேயே அதிக ப்ரோமோஷன்கள், சம்பள உயர்வு, தொடர் பட வாய்ப்புகள் எல்லாமே சுலபமாக கிடைக்கும். ஆனால் அப்படிப்பட்ட வாரிசு நடிகைகள் பலர் ரசிகர்களை கவராமல் சினிமாவை விட்டே சென்று விடுவர். அப்படி தமிழ் சினிமாவில் மார்க்கெட்டில்லாமல் சென்ற 5 வாரிசு நடிகைகளை பற்றி தற்போது பார்க்கலாம்.

பேபி ஷாமிலி: நடிகை ஷாலினியின் தங்கையான இவர் குழந்தையாக துர்கா, அஞ்சலி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர். ஆனால் இவர் நடிகையாக பின் நடிகர் விக்ரம் பிரபுவின் நடிப்பில் உருவான படத்தில் நடித்தார். ஆனால் அப்படம் அவருக்கு கைகொடுக்காததால் அதன் பின் பெரிய அளவில் இவருக்கு படவாய்ப்புகள் வராமல் அப்படியே உள்ளார். அவ்வப்போது நடிகர் அஜித்துடன் எடுக்கும் குடும்ப புகைப்படத்தில் இவரை அவ்வப்போது பார்க்கலாம்.

Also Read: புற்றுநோயை வைத்து எடுக்கப்பட்ட 4 படங்கள்.. அஞ்சலி பாப்பாவாக அசத்திய பேபி ஷாமிலி

அக்ஷரா ஹாசன்: கமலஹாசனின் இளைய மகளான நடிகை அக்ஷரா ஹாசன் தன் அக்கா ஸ்ருதிஹாசன் போல் ஒரு ரவுண்டு வர வேண்டும் என நினைத்து விக்ரம் நடிப்பில் வெளியான கடாரம் கொண்டான் படத்தில் நடித்தார். அப்படத்தில் இவரின் நடிப்பு பெருமளவில் பேசப்பட்டாலும் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வராமலே உள்ளது.தற்போது மும்பையில் ஸ்ருதிஹாசனுடன் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதேவி விஜயகுமார்: நடிகர் விஜயகுமாரின் மூன்றாவது மகளான இவர், தன் அழகில் ரசிகர்களை கட்டிப்போட்டவர்.ஜீவாவின் தித்திக்குதே, தனுஷின் தேவதையை கண்டேன் உள்ளிட்ட படங்களில் இவரின் நடிப்பு வேற லெவலில் இருக்கும். தெலுங்கு மொழியிலும் சில படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் பட வாய்ப்புகளை இழந்தார். அதன் பின் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார்.

Also Read: அடுத்தடுத்த பிரேக் அப்,வெளிநாட்டிலேயே டெண்ட் போட்ட ஸ்ருதிஹாசன்.. சத்தம் இல்லாமல் நடக்கும் ட்ரீட்மென்ட்

கார்த்திகா நாயர்: 80களின் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை ராதாவின் மூத்த மகளான இவர், ஜீவா நடிப்பில் வெளியான கோ திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக நடித்தார். இப்படத்தின் வெற்றிக்கு பின் பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்தில் நடித்த இவர், தனது மார்க்கெட்டை மொத்தமாக இழந்தார். மேலும் அவர் நடித்த சில தெலுங்கு, மலையாள படங்களும் கைகொடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் ராதாவுடன் வசித்து வருகிறார்.

வரலட்சுமி சரத்குமார்: நடிகர் சரத்குமாரின் மகளான இவர், நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளியான போடா,போடி திரைப்படம் மூலமாக கதாநாயகியாக வளம் வந்தார். அதன் பின் சில படங்களில் நடித்த இவர் வில்லி கதாபாத்திரத்தில் பல மொழிகளில் கமிட்டாகி வருகிறார். இருந்தாலும் இவரால் கதாநாயகியாக ஜொலிக்க முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

Also Read: பாடி ஷேமிங், அதிரடியாக 18 கிலோ உடல் எடையைக் குறைத்த வரலட்சுமி.. தலைவர் பிறந்தநாள் ஸ்பெஷல் புகைப்படங்கள்

Trending News