வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

60 வயசானாலும் 35 வயது போல் இளமையுடன் ஜொலிக்கும் 5 ஹீரோக்கள்.. காலேஜ் ஸ்டுடென்ட் போல உலா வரும் உலக நாயகன்

Look like young heros: சினிமாவைப் பொறுத்தவரை அழகும் தோற்றமும் ரொம்பவே முக்கியம் என்று காலம் காலமாக உணர்த்தி வருகிறார்கள். அதுவும் இளமையுடன் ஜொலிக்க வேண்டும் என்று தான் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அப்படி இருந்தால் மட்டுமே சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்களுடைய படத்தை பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள்.

ஆனால் இதையெல்லாம் மாற்றும் விதமாக சில நடிகர்களுக்கு 60 வயது தாண்டிய நிலையிலும் 35 வயது போல் பார்ப்பதற்கு இளமையாகவே இருக்கிறார்கள். அந்த நடிகர்களை பற்றி தற்போது பார்க்கலாம். அதில் மலையாள சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் மம்முட்டிக்கு வயது தற்போது 71 ஆகியிருக்கிறது. ஆனாலும் இவரை பார்ப்பதற்கு 35 வயது போல்தான் மதிக்கக் கூடியவராக இளமையான தோற்றத்துடன் இருக்கிறார்.

Also read: வில்லனா இருந்த உன்ன ஹீரோவா ஆக்கினது தப்பா போச்சு.. இமேஜ் பார்க்கும் சரத்குமார், புலம்பி தவிக்கும் தயாரிப்பாளர்

அதே போல் நடிகர் சரத்குமார், இவருக்கு தற்போது 69 வயது ஆகிவிட்டது. ஆனால் இவரை பார்ப்பதற்கு, என்ன இவருக்கு 69 வயதா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு தன்னுடைய உடம்பை கட்டுமஸ்தான் போல் ஸ்ட்ராங்காக வைத்து இப்ப வரை ஹீரோ தோற்றுத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் இவருக்கு 61 வயது ஆகியும் இன்னும்வரை தன்னுடைய உடம்பை சரிவர பராமரித்து 35 வயது மதிக்கத்தக்க ஹீரோவாக உலா வருகிறார். அடுத்து நடிகர் அர்ஜுனுக்கு வயது 60 தாண்டி விட்டது. ஆனால் இவரை பார்ப்பதற்கு அப்படியா தெரிகிறது. சிக்ஸ் பேக்குகளை வைத்து இன்னும் ஹீரோவாகவே ரசிகர்களை கொள்ளை அடித்து வருகிறார்.

Also read: அர்ஜுனுக்கு சம்பந்தியாகும் பிரபல காமெடி நடிகர்.. விரைவில் ஐஸ்வர்யாவுக்கு திருமணம்

அத்துடன் லியோ படத்தில் இவருடைய சிக்ஸ் பேக்கை பார்த்து லோகேஷ் மிரண்டு போய்விட்டார். அந்த அளவிற்கு உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார். அடுத்ததாக காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் போல் தற்போது வரை ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்பவர் தான் உலக நாயகன். இவருடைய வயது 68, ஆனால் பார்ப்பதற்கு ஏதோ 35 வயது போல் தான் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி இந்த ஹீரோக்கள் அனைவரும் 60 வயது தாண்டிய நிலையிலும் இன்னும் இளமையாகவே உலா வந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் தற்போது வரை இவர்கள் ரசிகர்களை தன்வசம் வைத்துக்கொண்டு படங்களில் தொடர்ந்து நடித்து வெற்றியை கொடுத்து வருகிறார்கள்.

Also read: கமலின் காலில் விழப்போன ரஜினி.. 33 வருடங்களாக ரகசியத்தை சொல்லாமல் மறைத்து வரும் உலக நாயகன்

Trending News