சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

இரட்டை வேடத்தில் ஹீரோக்களையே ஓரம் கட்டிய 5 கதாநாயகிகள்.. அதிலும் வில்லியாக மிரட்டிய சமந்தா

கமல், ரஜினி, அஜித், விஜய் என முன்னணி நடிகர்கள் இரட்டை வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தது போல், நடிகைகளும் ஹீரோக்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என இரட்டை வேடங்களில் நடித்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கின்றனர். அப்படி சமந்தா இரட்டை வேடத்தில் அதிலும் வில்லியாக நடித்து மிரட்டியிருப்பார்

சினேகா: 2003 ஆம் ஆண்டு கரு பழனியப்பன் இயக்கத்தில் வெளிவந்த பார்த்திபன் கனவு படத்தில் சினேகா இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இவருக்கு கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடித்திருப்பார். இதில் நவீன காலத்தை விரும்பும் பார்த்திபன் அவருக்கு ஏற்றார்போல் மாடர்னாக இருக்கும் ஜனனி என்ற பெண்ணை ஒரு தலையாக காதலிப்பார்.

அதன்பிறகு குடும்பத்தார் பார்த்திபனுக்கு ஜனனி போலிருக்கும் சத்யாவை திருமணம் செய்து வைப்பார்கள். அதன் பிறகுதான் ஜனனி, சத்யா இருவரும் ஒரே மாதிரியாக இருக்கும் இரட்டையர்கள் என்பதில் பார்த்திபனுக்கு புரியும். நினைத்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாமல் பார்த்திபன் சத்யாவை வெறுத்து ஒதுக்குவதும், எதிர் வீட்டிலேயே குடியேறிய ஜனனி மீது இருக்கும் காதலை வெளிப்படுத்த முடியாமலும் பார்த்திபன் திணறுவார். இதில் சினேகா இரட்டை வேடத்தில் ஜனனி, சத்யா இரு கதாபாத்திரத்திலும் கச்சிதமாக நடித்து அசத்தியிருப்பார்.

ஜோதிகா: 2004 ஆம் ஆண்டு சசி சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த பேரழகன் படத்தில், சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்கள். இதில் சூர்யா-ஜோதிகா ஜோடி காதலர்களாக இருப்பார்கள். அதே போன்று இன்னொரு ஜோடி மாற்றுத்திறனாளியாக இருப்பார்கள்.

இதில் சூர்யா கூன் விழுந்த மாதிரி இருப்பார். பார்வையற்றவராக இருக்கும் மற்றொரு ஜோதிகாவை விரும்புவார். இதில் மார்டனாக இருக்கும் சூர்யா-ஜோதிகா தம்பதியரில் ஜோதிகா இறந்துபோக ஜோதிகாவின் கண்ணை எடுத்து பார்வையற்ற மற்றொரு ஜோதிகாவிற்கு பொருத்துவார்கள். இதில் கண்ணு தெரியாமல் ஜோதிகா பிரமாதமாக நடித்திருப்பார்.

சமந்தா: விஜய்மில்டன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டில் வெளியான 10 எண்றதுக்குள்ள படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்திருப்பார். சமந்தா இரு வேடத்தில் அசத்தியிருப்பார். இரட்டை வேடத்தில் ஒரு சாதாரண வெகுளிப் பெண் போன்றும், மற்றொரு வேடத்தில் மிரட்டலான வில்லியாகவும் நடித்து மிரட்டியிருப்பார்.

இந்த படத்தில் சமந்தா, தன்னுடைய நடிப்பின் வேறொரு கோணத்தை காண்பித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இந்தப்படத்தின் கிளைமாக்ஸில் அப்பாவியாக இருக்கும் சமந்தா வில்லியாக இருக்கும் மற்றொரு சமந்தாவை அழிப்பதற்கு உதவியாக இருக்கும் அந்த நேரத்திலும் தம்முடைய வெகுளித்தனம் மாறாமல் விக்ரமுடன் இணைந்து செயல்பட்டு இருப்பார்.

பிரியாமணி: 2012 ஆம் ஆண்டு பொன்குமரன் இயக்கத்தில் வெளிவந்த சாருலதா படத்தில் பிரியாமணி இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். ஒட்டிப் பிறக்கும் இரட்டையர்களான சாரு, லதா இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் அன்பான சகோதரிகளாக இருப்பார்கள்.

மென்மையாக இருக்கும் சாருவை இளைஞன் ஒருவர் திருமணம் செய்து கொள்ள நினைப்பார். ஆனால் லதாவுக்கு இது பிடிக்காததால் சாரு இறப்பதற்கு லதா காரணம் ஆகி விடுவார். அதன்பிறகு சாரு காதலித்தவரை லதா திருமணம் செய்து கொள்ள முயற்சித்தபோது, ஆவியாக வந்து லதாவை பாடாதபடு படுத்துவார். இதில் பிரியாமணி லதா, சாரு என இரட்டை வேடத்தில் தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.

இப்படி இந்த 5 கதாநாயகிகளும் இரட்டை வேடத்தில் கதாநாயகர்களையே மிஞ்சும் அளவுக்கு பிரமாதமாக நடித்து ரசிகர்களை கவர்ந்து இருப்பார்கள். அதிலும் வில்லியாக சமந்தா மிரட்டியது கூடுதல் சிறப்பு.

Trending News