டாப் ஹீரோக்களின் படங்கள் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. குறிப்பாக ஹீரோக்களின் சம்பளமே அதிகப்படியாக உள்ளதால் பட்ஜெட்டும் இரட்டிப்பாகிறது. கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய எடுக்கப்பட்டது. அந்த வகையில் இப்போது பெரிய பட்ஜெட்டில் உருவாகும் 5 படங்களை பார்க்கலாம்.
இந்தியன் 2 : லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. பொதுவாக ஷங்கர் தன்னுடைய படங்களை பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கக் கூடியவர். அந்த வகையில் இந்தியன் 2 படமும் 250 கோடி பட்ஜெட்டை தாண்டி எடுக்கப்படுகிறதாம்.
Also Read : கஜானாவை திறக்காமலே படத்தை தயாரிக்கும் கமல்.. ராஜதந்திரியாக மாறிய உலக நாயகன்
தங்கலான் : விக்ரமின் முந்தைய படமான கோப்ரா படம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் மண்ணை கவ்வியது. இப்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த வரும் தங்களான் படமும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. கிட்டத்தட்ட 150 கோடி பட்ஜெட்டில் தங்களான் படம் எடுக்கப்பட்டு வருகிறது.
ஜெயிலர் : நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் 200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறதாம். ரஜினியின் சம்பளம் மட்டும் கிட்டத்தட்ட 80 கோடி என கூறப்படுகிறது. மேலும் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படத்தை விட இந்த படத்தின் பட்ஜெட் அதிகமாகும்.
Also Read : ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினி இணையும் பிரம்மாண்ட கூட்டணி.. அதிகாரப்பூர்வமாக வெளிவந்த தலைவர்-170 அறிக்கை
லியோ : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 300 கோடி ஆகும். மேலும் இதில் விஜய்யின் சம்பளம் மட்டும் 120 கோடி. மாஸ்டர் படத்துக்கு பிறகு இந்த கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த படத்திற்காக காத்திருக்கிறார்கள்.
சூர்யா 42 : சிறுத்தை சிவா, சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் படம் சூர்யா 42. இப்படம் 3டி அனிமேஷனில் உருவாகி வருகிறது. சூர்யாவின் இந்த படம் பத்து மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளதாம். மேலும் லியோ படத்திற்கு போட்டியாக சூர்யா 42 படமும் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
Also Read : சிம்ரனுக்காக மேனேஜர் வேலையை விட்டு வந்த சூர்யா.. முதல் பட ரகசியத்தை உடைத்த குணசேகரன்