Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயனின் சினிமா வளர்ச்சி அசுர வளர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். கண்ணிமைக்கும் நேரத்தில் சிவகார்த்திகேயன் தற்போது பாக்ஸ் ஆபீஸ் கிங் ஆக மாறி இருக்கிறார்.
இதற்கு காரணம் இவருடைய கடின உழைப்பு என்று கூட சொல்லலாம். இந்த வெற்றிக்குப் பின்னால் அவர் பட்ட அவமானங்களும் அதிகம்.
சிவகார்த்திகேயன் தான் அடுத்த தளபதி என்று சொல்லும் அளவுக்கு அவருடைய வாழ்க்கையை மாற்றிய ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.
வசூல் கிங் ஆக மாற்றிய 5 படங்கள்
அமரன்: சிவகார்த்திகேயனை டாப் ஹீரோக்களின் வட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருப்பது அமரன் படம்.
பயோ பிக் படத்தில் இத்தனை கோடி வசூலை அள்ள முடியும் என்பதை சிவகார்த்திகேயன் நிரூபித்து இருக்கிறார். இந்தப் படம் கிட்டதட்ட 330 கோடி வசூல் செய்து இருக்கிறது.
டான்: சிவகார்த்திகேயன் – எஸ் ஜே சூர்யா காம்போவில் ரசிகர்கள் கொண்டாடிய படம் தான் டான். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் பள்ளி மற்றும் கல்லூரி மாணவராக கலக்கியிருப்பார்.
இந்த படம் கிட்டத்தட்ட 125 கோடி வசூல் செய்தது. சிவகார்த்திகேயனின் இரண்டாவது 100 கோடி வசூல் படம் இதுதான்.
டாக்டர்: சிவகார்த்திகேயனை வைத்து படமெடுத்து 100 கோடி வசூல் எடுக்கலாம் என்பதை சத்தமாய் உரைத்த படம் டாக்டர். படம் முழுக்க காமெடி, சிவகார்த்திகேயன் ஒரு சில வார்த்தைகள் தான் பேசுவார்.
நெல்சன் இன் இந்த வித்தியாசமான முயற்சிக்கு ரசிகர்கள் கொடுத்த பரிசு தான் 102 கோடி வசூல். சிவகார்த்திகேயனின் முதல் 100 கோடி வசூல் படம் இது.
வேலைக்காரன்: சிவகார்த்திகேயனுக்கு நயன்தாரா ஜோடியாக நடிக்கிறார் என்ற போதே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது.
இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான இந்த படம் 40 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு 87 கோடி வசூலித்தது.
மாவீரன்: மடோன் அஸ்வின் இயக்கி சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படம் கடந்த 2023 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. வித்தியாசமான கதை களத்துடன் வெளியான இந்த படம் 81 கோடி வசூலித்தது.