வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அப்பா, மகனாக நடித்து அதிரிபுதிரி ஹிட்டான 5 படங்கள்.. பாரிஸ்டர் ரஜினிகாந்த் ஆக பின்னிய சிவாஜி

இரட்டை கதாபாத்திரம் என்பது தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் மெனக்கெட்டு நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவார்கள். அதிலும் அப்பா,மகன் என்ற இரு கதாபாத்திரங்களில் நடிக்கும்போது, வயது வித்தியாசம், தோற்றம், பேச்சு, நடை, உடை என அனைத்திலும் வித்தியாசத்தை காண்பித்து படத்தையும் ஹிட்டாக்குவார்கள். அப்படி நம் தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன் முதல் சூர்யா வரை பல நடிகர்கள் அப்பா-மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி உள்ளனர்.அவர்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

கௌரவம்: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1973ஆம் ஆண்டு இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கத்தில் வெளியான கௌரவம் திரைப்படம் 100 நாட்களை கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் . இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் பாரிஸ்டர் ரஜினிகாந்த் என்ற உயர் நீதிமன்ற வழக்கறிஞராக வலம் வருவார். மகன் கதாபாத்திரத்தில் கண்ணன் என்ற வழக்கறிஞராக சிவாஜி கணேசன் நடித்து அசத்தியிருப்பார்.

Also Read: சிவாஜி கணேசன் செய்த செயலால் மிரண்டு போன பாலய்யா.. நடிகர் திலகம்னா சும்மாவா?

நெற்றிக்கண்: 1981 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்பா, மகனாக நடித்த நெற்றிக்கண் திரைப்படத்தில் சரிதா, லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருப்பர் . பணக்கார தந்தையாகவும் பெண்கள் மேல் அதிக ஈடுப்பாடுடனும் சக்கரவர்த்தி என்ற கதாபாத்திரத்தில் வில்லன் அப்பாவாக ரஜினிகாந்த் நடித்திருப்பார். தந்தை செய்யும் அனைத்து தவறுகளையும் எதிர்த்து போராடும் மகனாக சந்தோஷ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். முத்துராமன் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் ரஜினியின் கேரியருக்கு முக்கியமாக அமைந்தது.

இந்தியன்: 1996ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன். மனிஷா கொய்ராலா,கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படத்தில் கமலஹாசன் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இதில் இந்தியன் தாத்தாவாக வலம் வந்த கமலஹாசனை அவ்வளவு எளிதாக நம்மால் மறக்க முடியாது. தவறு செய்யும் அனைத்து அரசு அதிகாரிகளையும் வேரோடு அழிக்கும் விதமாக இந்த கதாப்பாத்திரம் அமைந்திருக்கும். இவரது நேர்மையால் தனது மகன் என்றும் பாராமல் கடைசியில் அவரையும் கொன்று நியாயத்தை நிலை நாட்டுவார்.

Also Read: 80-களில் கமலஹாசன் செய்த சாதனை.. இதுவரை யாராலும் முறியடிக்க முடியவில்லை

வாரணம் ஆயிரம்: 2008 ஆம் ஆண்டு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா, சமீரா ரெட்டி, திவ்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படம் பல கெட்டப்புகளில் சூர்யா நடித்திருப்பார். இதில் தந்தை சூர்யாவாக நடித்த கதாபாத்திரம் மகன் சூர்யாவிற்கு சிறுவயதிலிருந்தே சொல்லிக் கொடுக்கும் பாடங்களை எப்படி மகன் சூர்யா தனது வாழ்க்கையில் எடுத்து பயன்படுத்திக் கொள்கிறார் என்ற வித்தியாசமான கதைக்களத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருப்பார். இத்திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படம் என்ற தேசிய விருதும் கிடைத்தது.

தவசி: 2001 ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த், சௌந்தர்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான தவசி திரைப்படத்தில் விஜயகாந்த் அப்பா, மகன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். துளசி வாசம் மாறினாலும் தவசி வார்த்தை மாறாது என்ற டயலாக்குகள் இத்திரைப்படத்தில் தெறிக்க விட்டிருக்கும். அந்த ஆண்டின் காதல்,செண்டிமெண்ட் என அனைத்தும் காட்சிகளும் பக்காவாக இடம்பெற்று கமர்ஷியல் வெற்றியை பெற்றது.

Also Read: பாலிவுட்டிலும் வேலையை காட்டிய அட்லி.. விஜயகாந்த் படத்தால் ஷாருக்கானுக்கு வந்த பிரச்சினை

Trending News