திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சிம்புவை அடுத்த லெவலுக்கு கொண்டு போன 5 படங்கள்.. சீனா தானாவ அடித்து துவட்டிய தொட்டி ஜெயா

5 Hit movies that took Actor Simbu to the next level: தமிழ் சினிமாவில் குழந்தையின் நட்சத்திரமாக அறிமுகமாகி விரல் மூலம் வித்தை காட்டி, காதல்  சப்ஜெக்ட்டை கையில் எடுத்து மன்மதன், நல்லவன் வல்லவன், கெட்டவன் என ரசிகர்கள் இடையே பல அறிமுகங்களை கொடுத்து கால் நூற்றாண்டுக்கும் மேலாக இன்றும் முன்னணியில் இருக்கும் நடிகர் சிம்பு.

சிம்பு தனது திரை வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து உள்ளார். தனது சர்ச்சையான பேச்சுக்கள் மூலமாக எப்போதும் ட்ரெண்டிங்கில்  இருக்கும் இந்த மன்மதனுக்கு தமிழ் சினிமாவில் திருப்புமுனையை கொடுத்த ஐந்து திரைப்படங்களை காணலாம்.

கோவில்: 2004 இல் ஹரி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் கோவில்.  மதங்களுக்கு அப்பாற்பட்டது தான் காதல் என இளம் தலைமுறைகளுக்கு பிடித்தவாறு  காதலை ஜெயிக்க வைத்திருந்தார் ஹரி. அதுவரை கைகளை மட்டுமே ஆட்டி பன்ச் வசனம் பேசி வந்த சிம்புவிற்கு இப்படம்  நல்ல பேரை வாங்கித் தந்தது.

மன்மதன்: காதலிக்கும் அப்பாவி இளைஞர் ஆகவும், காதல் என்ற பெயரில் இளைஞர்களை ஏமாற்றும் பெண்களை கொள்ளும் கில்லர் ஆகவும் வந்து அனைவரையும் மிரட்டி இருந்தார் சிம்பு. மன்மதன் படத்திற்கு பின் சிம்புவின் புகழ் பல மடங்காக கூடியது.

Also read: தொட்டதெல்லாம் துலங்காமல் அவஸ்தை பட்டு வரும் சிம்பு.. படத்திலும் ரியலிலும் ஜீரோவான STR

தொட்டி ஜெயா: வறுமையில் வாடும் சிறுவன், பணத்திற்காக வன்முறையை கையில் எடுத்தாலும் அடிப்படையில் நல்லவனாக இருந்த கதையே தொட்டி ஜெயா. காதலுக்காக தடைகளை தகர்த்தெறியும் சிம்பு இறுதியில்வில்லன் சீனா தானா வை அடித்து துவைத்து காதலியை கரம் பிடிப்பார். சிம்புவின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது. தயாரிப்பாளர் தாணு, டி.ஆரிடம் இருந்த மனக்கசப்பில் சிம்புவை படத்தில் நடிக்க வைக்க தயங்கினாராம். ஒரு வழியாக சிம்பு நடித்து படம் ஹிட் ஆகியதால் தாணுவிற்கு இருந்த மனக்கசப்பு நீங்கியதாம்.

விண்ணைத்தாடி வருவாயா:  கௌதம்மேனன் இயக்கத்தில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் சிம்புவிற்கு சினிமா கேரியரில் திருப்புமுனையாக அமைந்தது. மென்மையான காதலை வெளிப்படுத்துவதில் உச்சம் தொட்டார் சிம்பு. இப்படத்தில் ஜெசியால் கைவிடப்பட்ட போது ஏமாந்தது சிம்பு மட்டுமல்ல! ரசிகர்களும் தான் என வருத்தப்பட வைத்தார் சிம்பு.

மாநாடு: சயின்ஸ் பிக்சன், டைம் டிராவல் படத்தில் சிம்புவா என  ஆச்சரியப்பட்டு கேள்வி கேட்டவர்களை அடாவடி காட்டாமல் அசால்டா நடிச்சு தூக்கினார். வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படம் பல்வேறு விமர்சனங்களையும் தாண்டி வசூலில் வெற்றி நடை போட்டது.

பல வெற்றி படங்களை கொடுத்த சிம்பு அவர்கள் தற்போது உலகநாயகன் கமலஹாசன் தயாரிப்பில் சிம்பு 48 படத்தில் நடித்து வருகிறார். பிப்ரவரி 3  சிம்புவின் பிறந்த நாளான இன்று இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது.

Also read: ஆண்டவருக்கே அல்வா கொடுக்க நினைத்த சிம்பு.. விட்டு பிடிக்கும் உலக நாயகன்

Trending News