சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

உலக நாயகன் நடிப்பில் வெளியான 5 ஹாரர் படங்கள்.. கொலை நடுங்க வைக்கும் டிக் டிக் டிக்

சினிமாவை வித்தியாசமாக பார்க்கக்கூடிய உலக நாயகன் கமலஹாசன் கோலிவுட்டிற்கு புதுப்புது தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். இப்படிப்பட்டவர் ஆரம்ப காலத்தில் நிறைய ஹாரர் படங்களில் நடித்ததின் மூலம், அந்த சமயத்தில் இருந்த டாப் ஹீரோக்களுக்கு எல்லாம் டஃப் கொடுத்தார். அதிலும் இவர் நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் படத்தை பார்ப்போரை கொலை நடுங்க வைத்தார்.

சிவப்பு ரோஜாக்கள்: 1978 ஆம் ஆண்டு கமலஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான இந்த திகில் திரைப்படம் திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இதுமட்டுமின்றி தமிழகம், ஆந்திரா, கன்னடம் போன்ற 3 மாநிலங்களிலும் வெற்றி விழா கண்டது.

ஒரு உண்மை கதையை வைத்து இந்தப் படத்தை உருவாக்கிய இயக்குனர் பாரதிராஜா படத்தைப் பார்ப்போரை பதற வைக்கும் அளவுக்கு படத்தில் இருக்கும் சீன்களை காட்சிப்படுத்தி இருப்பார். இதில் உலக நாயகன் திலீப் என்ற கதாபாத்திரத்தில் பெண்களை கொலை செய்து தன்னுடைய வீட்டிலேயே சமாதிக்கட்டும் சைக்கோவாக நடித்து பயம் காட்டி இருப்பார்.

Also Read: சிவப்புகமலஹாசனை காலை வாரிவிட்டு 5 தோல்வி படங்கள்.. தடமே தெரியாமல் தியேட்டரைவிட்டு தெறித்து ஓடிய மும்பை எக்ஸ்பிரஸ்

டிக் டிக் டிக்: 1981 ஆம் ஆண்டு கமலஹாசன், மாதவி, ராதா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்தப் படத்தில் உலக நாயகன் திலீப் என்ற கதாபாத்திரத்தில் குற்றவாளிகளை கையும் களவுமாக பிடிக்கும் முயற்சியில் இருப்பார். அப்போது படத்தில் இடம்பெறும் நிறைந்த காட்சிகள் பார்ப்போரை கொலை நடுங்க வைக்கும் அளவுக்கு இருக்கும்.

கலைஞன்: 1993 ஆம் ஆண்டு ஜிபி விஜய் இயக்கத்தில் ராம்குமார் தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் கமலஹாசன் உடன் பிந்தியா, சிவரஞ்சனி நாசர் உள்ளிட்டோர் இணைந்து நடித்திருப்பார்கள், இந்த படத்தின் கதை திகில் நிறைந்ததாகவும் இந்திரஜித் ஆக உலக நாயகன் ரசிகர்களை பயத்தில் ஆழ்த்திருப்பார்.

வேட்டையாடு விளையாடு: 2006 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் டிஜிபி ராகவன் கதாபாத்திரத்தில் கமலஹாசன் மிரட்டி இருப்பார். பல மர்மங்கள் நிறைந்த இந்த படத்தில் அடுக்கடுக்காக பெண்களை கொலை கொன்ற சைக்கோ கில்லர்களை டிஜிபி ராகவன் எப்படி கையும் களவுமாக பிடிக்கிறார் என்பதை திகிலுடன் காட்டியிருப்பார்கள்.

Also Read: புலம்பித் தவிக்கும் ஸ்ருதிஹாசன்.. மருந்து கொடுத்து காப்பாற்றுவாரா கமலஹாசன்

உன்னைப்போல் ஒருவன்: 2009 ஆம் ஆண்டு கமலஹாசன் மோகன்லால் மீட்டர் நடிப்பில் வெளியான இந்த படத்தில் இதில் தொலைபேசியின் மூலம் போலீஸ் கமிஷனரை மிரட்டி தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என கமலஹாசன் மிரட்டுவார் இதை போலீஸ் எப்படி சமாளித்து கமலஹாசனை கண்டுபிடிக்கும் என்பதை சுவாரசியமாகவும் மர்மத்துடன் படத்தை கொண்டு சென்றிருப்பார்கள்.

இவ்வாறு இந்த 5 படங்கள்தான் கமலஹாசன் நடிப்பில் வெளியான ஹாரர் திரைப்படங்களாகும். அதிலும் இந்தப் படங்களில் எல்லாம் ரசிகர்களை உறைய வைக்கும் அளவுக்கு உலகநாயகன் தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டி திகிலூட்டி இருப்பார்.

Also Read: தோல்வியே காணாத கமலஹாசனின் ‘வி’ தலைப்பில் 8 படங்கள்.. லிஸ்டில் சேருமா விக்ரம்?

Trending News