புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

இந்த ஆண்டில் கலக்க போகும் 5 முத்தின கத்தரிக்காய்.. எல்லா படத்தையும் வளச்சு போட்ட ஆன்ட்டி ஹீரோயின்

Leading Actress Upcoming Movies: ஒரு காலத்தில் ஹீரோக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்த சினிமா தற்போது நடிகைகளையும் கௌரவிக்கும் விதமாக அதற்கேற்ற சப்ஜெக்ட் படங்களையும் கொண்டு வர ஆரம்பித்து விட்டார்கள். அதனாலேயே நடிகையின் தனித்துவமான நடிப்பை பார்க்க முடிகிறது. அந்த வகையில் ஹீரோகளுக்கு இணையாக எந்த விதத்திலும் நாங்கள் குறைஞ்சவங்க இல்ல என்பதற்கு ஏற்ப பல வாய்ப்புகளை பெற்று வருகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சில நடிகைகளின் மவுஸ் குறைந்துவிடும். ஆனால் சில நடிகைகளுக்கு மட்டும் இது விதிவிலக்காக அமைந்திருக்கிறது. அந்த வகையில் வயசானாலும் முன்னணி ஹீரோயினாக சில நடிகைகள் வலம் வருகிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் கையில் பல பட வாய்ப்புகளை வைத்து இந்த ஆண்டில் கலக்கப்போகிறார்கள். அவர்கள் யார் என்பதையும் என்னென்ன படங்கள் என்பதை பற்றியும் பார்க்கலாம்.

40 வயதை தாண்டிய நிலையில் பேரழகியாக ஜொலித்து வரும் த்ரிஷா, செகண்ட் இன்னிங்ஸ் ஆக பொன்னியின் செல்வன் படத்தில் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து இந்த வருடம் கிட்டத்தட்ட அவருடைய நடிப்பில் ஆறு படங்கள் வெளிவர இருக்கிறது. அந்த வகையில் கமலுடன் தக் லைப், அஜித்துடன் விடாமுயற்சி, அரவிந்த் சாமிக்கு ஜோடியாக சதுரங்க வேட்டை 2, மோகன்லால் படமான ராம், கர்ஜனை, மற்றும் டோவினோ தாமஸ்க்கு ஜோடியாக ஐடென்டிட்டி படத்திலும் நடித்து வருகிறார்.

Also read: அடுத்தடுத்து வெளிவர இருக்கும் த்ரிஷாவின் 7 படங்கள்.. சூப்பர் ஸ்டாருடன் இணைந்த குந்தவை

அடுத்ததாக நயன்தாரா சினிமாவிற்குள் என்டரி கொடுத்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகியிருக்கிறது. தற்போது வரை 75 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். இப்பொழுது கல்யாணமாகி இரண்டு குழந்தைக்கு அம்மாவான பிறகும் ஆன்ட்டி ஹீரோயினாக தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் சசிகாந்த் இயக்கத்தில் டெஸ்ட் படமும், தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம், அருண் இயக்கத்தில் ஊர் குருவி மற்றும் 1960 முதல் மண்ணாங்கட்டி என்ற படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார். இந்த படங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக வெளிவர இருக்கிறது.

இவர்களை தொடர்ந்து சுருதிஹாசன், கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவிற்கு என்டரி கொடுக்கவில்லை. அதனால் தெலுங்கு பக்கம் சென்று ரொம்பவே பிஸியாகி முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். அதே மாதிரி இந்த ஆண்டும் தெலுங்கில் பட வாய்ப்புகளை பெற்றிருக்கிறார். தற்போது இயக்குனர் ஷனில் டியோ இயக்கத்தில் டயகோயிட் படத்திலும் அடுத்து பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த சலார் படத்தின் இரண்டாம் பாகத்திலும் கமிட்டாய் இருக்கிறார்.

அடுத்ததாக நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார். ஆனால் இவருக்கு ஏற்பட்ட நோயினால் கொஞ்சம் கேப் விட்டிருந்தார். அந்த வகையில் தற்போது மறுபடியும் ரீ என்டரி கொடுக்கும் வகையில் கதைகளை கேட்டு நடிப்பதற்கு பேச்சுவார்த்தை ஆரம்பித்திருக்கிறார். இவரை தொடர்ந்து நடிகை சாய் பல்லவி தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள SK 21 படத்தில் கமிட்டாகி இருக்கிறார். அடுத்ததாக தெலுங்கில் தண்டல் என்கிற படத்திலும் நடித்த வருகிறார். இப்படி இந்த நடிகைகள் அனைவரும் இந்த ஆண்டில் வெளிவர இருக்கும் படத்தில் பிஸியாகி இருக்கிறார்கள்.

Also read: நயன்தாரா வெளியிட்ட அறிக்கையின் முழு விவரம்.. சுயமரியாதை காசு கொடுக்குமா, பாலிவுட் வாய்ப்பு முக்கியம் பிகிலு

Trending News