சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

ரீ-என்ட்ரியில் மாஸாக வரும் வெள்ளிவிழா கண்ட 5 ஜாம்பவான்கள்.. மைக் மோகன் கதை தான் கொஞ்சம் பாவமா இருக்கு

பல வருடங்களாக நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்த நடிகர்கள் தற்போது மீண்டும் களம் இறங்கியுள்ளனர். தங்களுக்கு பிடித்த நடிகர்கள் மீண்டும் ரீ என்ட்ரி கொடுப்பதில் ஆர்வமான ரசிகர்கள் அவர்களின் படங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் மீண்டும் நடிப்பை கையில் எடுத்துள்ள ஐந்து ஜாம்பவான்களை பற்றி இங்கு காண்போம்.

மைக் மோகன்: 80 காலகட்டத்தில் ரஜினி, கமலுக்கு இடையான புகழுடன் இருந்த இவர் கடந்த பல வருடங்களாக நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார். நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடித்து வந்த இவர் தற்போது ஹரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஆனால் பட ரிலீஸ் மட்டும் எப்போது என்று தெரியவில்லை.

Also read: நெகட்டிவ் ரோலில் சிவாஜி கலக்கிய 5 படங்கள்.. ஆல் ரவுண்டராக இருந்த நடிகர் திலகம்

ராமராஜன்: 80 காலகட்டத்தில் கிராமத்து ஹீரோவாக வலம் வந்த இவருக்கு இப்போதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதனாலேயே இவர் தற்போது சாமானியன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்போது பயங்கர எதிர்பார்ப்பு இருக்கிறது.

கவுண்டமணி: நகைச்சுவை மன்னனாக பல திரைப்படங்களில் பட்டையை கிளப்பிய இவர் இப்போது அதிக அளவில் நடிப்பதில்லை. வயது மூப்பின் காரணமாக ஓய்வில் இருந்த அவர் தற்போது மீண்டும் நடிப்பில் களம் இறங்கியுள்ளார். அவருடைய புது பட அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.

Also read: 7 நாட்களில் 5 சர்ச்சைகளில் சிக்கிய விஜய்.. அடுத்தடுத்து விழும் பெரும் அடி

செந்தில்: பல திரைப்படங்களில் தனி காமெடியானாக இவர் நடித்திருந்தாலும் கவுண்டமணியுடன் சேர்ந்து இவர் கொடுக்கும் அலப்பறை ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலம். அதனாலேயே இப்போது கவுண்டமணி நடிக்க வந்தவுடன் இவருக்கும் வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது.

வடிவேலு: காமெடியன், குணச்சித்திரம், ஹீரோ என்று கலக்கி வந்த வடிவேலு சில வருடங்களுக்கு முன் சினிமாவில் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டார். தற்போது அனைத்து தடையும் நீங்கி மீண்டும் நடிக்க வந்திருக்கும் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குனிந்து கொண்டிருக்கிறது. அதில் இவர் ஹீரோவாக நடித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது.

Also read: அப்பா, மகனாக நடித்து அதிரிபுதிரி ஹிட்டான 5 படங்கள்.. பாரிஸ்டர் ரஜினிகாந்த் ஆக பின்னிய சிவாஜி

Trending News