செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

கலைஞர் நூற்றாண்டு விழாவில் சங்கமிக்கும் 5 மெகா ஸ்டர்கள்.. வீம்பு பண்ணும் ஹீரோ

Kalaignar Nootrandu Vizha: முத்தமிழ் அறிஞர் மு கருணாநிதியின் கலைஞர் நூற்றாண்டு விழாவை திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து நடத்தி வருகிறார்கள். இதில் அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று நடக்கும் விழாவில் யார் கலந்து கொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்கிறார். அதேபோல் உலகநாயகன் கமலஹாசனும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். அதேபோல் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மற்றும் மோகன்லால் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

சமீபத்தில் ஜெயிலர் படத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரும் இந்த விழாவில் பங்கு பெறுகிறார். தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சிரஞ்சீவியும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்கிறார். மேலும் பாலிவுட் பிரபலங்களும் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

Also Read : ஆஹா! ரஜினி கமல் இடத்திற்கு போட்டியா களமிறங்கும் ஷார்ப் ஹீரோ..35 வருடத்திற்கு அப்புறம் தமிழில் போடப்போகும் பட்டறை

ஆனால் சமீபத்தில் துபாயில் இருந்து அஜித் சென்னை வந்ததற்கு காரணம் கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள தான் என்று தகவல் வெளியானது. இப்போது அஜித் அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் வந்திருக்கிறது. பொதுவாகவே பொது நிகழ்ச்சிகளை அஜித் தவிர்த்து வருவது வழக்கம் தான்.

அதோடு மட்டுமல்லாமல் ஒருமுறை கலைஞர் நூற்றாண்டு விழாவில் நடிகர்களை விழாவிற்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம் என்று விழா மேடையிலேயே அஜித் துணிச்சலாக பேசி இருந்தார். அதற்கு ரஜினிகாந்தும் எழுந்து நின்று கைதட்டி இருந்தார். இது அப்போது ஒரு மிகப்பெரிய பிரளயத்தையே ஏற்படுத்தி இருந்தது. இந்த முறை அஜித் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கு பெறவில்லை.

Also Read : அஜித் எதிரியாக இருந்தாலும் அவரையே பாலோ பண்ணும் வடிவேலு.. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குது

Trending News