புதன்கிழமை, ஜனவரி 15, 2025

2023-ல் அனிருத் பாடி மெகா ஹிட் ஆன 5 பாடல்கள்.. தலைவரை டாப்புக்கு ஏற்றிய ஹுக்கும் பாடல்

Musician Anirudh: அனிருத் ஒரு இளம் இசையமைப்பாளராக அறிமுகமாகி கொஞ்ச வருடங்களிலேயே, ஏ ஆர் ரகுமானுக்கு அடுத்து தமிழ் சினிமாவில் இவர்தான் என்ற பெயரை வாங்கி விட்டார். தற்போது கோலிவுட் முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றால் அதற்கு இசை அனிருத் தான் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது. இந்த வருடத்திலும், அனிருத் தன்னுடைய இசையால் மக்களை அதிகமாக மகிழ்வித்து இருக்கிறார். அவருடைய இசையில் இந்த வருடம் சூப்பர் ஹிட் ஆன ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

அனிருத் தெறிக்க விட்ட ஐந்து பாடல்கள்

வாரிசு: இந்த வருட பொங்கலுக்கு விஜய் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் ஆக அமைந்த படம் வாரிசு. இந்த படத்திற்கு முழுக்க தமன் இசை அமைத்திருந்தார். இதில் ரஞ்சிதமே என்னும் பாடலை தளபதி விஜய் பாடியிருந்தார். அதேபோன்று தீ தளபதி பாடலை சிலம்பரசனை பாட வைத்து பயங்கரமாக ஹைப் ஏற்றினார்கள். அதே நேரத்தில் அனிருத், ஜொனிடா காந்தியுடன் இணைந்து பாடிய ஜிமிக்கி பொண்ணு இன்று வரை வைரலாக இருக்கிறது.

மாவீரன்: பிரின்ஸ் படத்தின் பெரிய தோல்விக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு மாவீரன் படம் கை கொடுத்தது. இந்த படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்திருந்தார். இதில் சீனு சீனு என்னும் பாடலை அனிருத் பாடியிருந்தார். கபிலன் மற்றும் லோகேஷ் இணைந்து எழுதிய இந்தப் பாடல் வரிகள் அனிருத்தின் குரலில் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.

Also Read:2023 இல் வசூலில் 600 கோடி கடந்து சாதனை படைத்த 5 படங்கள்.. ஜெயிலரை மிஞ்சிய பதான்!

ஜெயிலர்: இந்த வருடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தின் எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட் என்றாலும், அனிருத் பாடிய தலைவர் அலப்பறை பாடல் பெரிய அளவில் வைரலாகியது. பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானதோடு சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்தது இந்த பாடல்.

ஜவான்: இசையமைப்பாளர் அனிருத் இந்த வருடம் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியிருக்கிறார். ஷாருக்கானுக்கு இது சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்தின் டைட்டில் ட்ராக் மற்றும் ராமையா வஸ்தாவையா என்னும் இரண்டு பாடல்களை அனிருத் பாடியிருந்தார். பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது.

லியோ: அனிருத் இந்த வருடம் ஒரே சமயத்தில் ரஜினி மற்றும் விஜய் படங்களுக்கு இசையமைத்தார். இதனால் இவர் யாருடைய படத்திற்கு நல்ல பாட்டை கொடுக்கிறார் என்ற பேச்சு எழுந்து கொண்டு இருந்தது. ஆனால் இரண்டு படங்களிளுமே மெகா ஹிட் பாடல்களை கொடுத்து அனிருத் ஜெயித்துவிட்டார். விஜய் நடித்த லியோ படத்தில் பிளடி ஸ்வீட், நான் ரெடி தான் வரவா, பேடாஸ் போன்ற பாடல்களை அனிருத் பாடியிருந்தார். லியோ படத்தின் பாடல்கள் அத்தனையுமே மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.

Also Read:தோல்விக்குப்பின் தரமான சம்பவம் செய்து வெற்றி கண்ட 5 இயக்குனர்கள்.. விஜய்யின் வசூலை சரி கட்டிய ஜெயிலர்

Trending News