ஓடிடியில் அதிக வியூஸ் பெற்ற 5 படங்கள்.. தியேட்டரில் சோடை போனாலும் தக் லைஃப்க்கு கிடைத்த வரவேற்பு

Thug Life : கடந்த வாரம் தியேட்டரில் சிறிய பட்ஜெட்டில் வெளியான நிறைய படங்களுக்கு வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில் சித்தார்த்தியின் 3BHK, சிவாவின் பறந்து போ ஆகிய படங்கள் நேர்மையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மற்றொருபுறம் கடந்த வாரம் ஓடிவடியிலும் நிறைய படங்கள் வெளியானது.

இதில் அதிக பார்வையாளர்களை கடந்த படங்களை இப்போது பார்க்கலாம். ஐந்தாவது இடத்தில் பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான Heads Of State படம் இடம் பிடித்திருக்கிறது. இந்த இடத்தில் நான்காவது இடத்தில் உப்பு கப்பரம்பு படம் இடம் பெற்றிருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான இந்த படம் நேரடியாகவே அமேசான் பிரைமில் வெளியானது. காமெடி ஜானரில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கமல், சிம்பு நடிப்பில் வெளியான தக் லைஃப் படம் வெளியானது.

சமீபத்தில் ஓடிடியில் அதிக வியூஸ் பெற்ற 5 படங்கள்

இந்த படம் தியேட்டரில் காற்று வாங்கிய நிலையில் வசூலிலும் அடி வாங்கியது. ஆனால் ஓடிடியில் கிட்டத்தட்ட 25 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சென்றதால் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. இது ரசிகர்களுக்கே மிகப்பெரிய அதிர்ச்சியாக தான் இருக்கிறது.

இரண்டாவது இடத்தில் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான சேகரி சாப்டர் 2 படம் இருக்கிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். முதலிடத்தில் ரெய்டு 2 படம் 55 லட்சம் பார்வையாளர்களை கடந்து இருக்கிறது. இப்படம் நெட்பிளிக்சில் வெளியானது.

மேலும் தியேட்டரில் தக் லைஃப் படம் வரவேற்பு கிடைக்காமல் இருந்த நிலையில் ஓடிடியில் ரசிகர்களால் பார்க்கப்பட்டது கமலுக்கு ஆறுதலாக அமைந்து இருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் என்னென்ன படங்கள் ஓடிடியில் வெளியாகிறது என்ற ஆர்வமும் ரசிகர்களிடம் இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →