சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கைதியாக வந்து லவ்வராக மனதைத் தொட்ட கண்ணா ரவியின் 5 படங்கள்.. பிள்ளையார் சுழி போட்டு லோகேஷ்

Actor Kanna Ravi Best 5 Movie: படங்களில் ஹீரோ ஹீரோயின்களை தவிர ஒரு சில கேரக்டர்களும் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்து போய்விடும். அப்படி கைதியாக வந்து லவ்வராக எல்லோருக்கும் பிடித்த நடிகர் கண்ணா ரவியின் ஐந்து படங்களை பற்றி பார்ப்போம்.

கைதி: லோகேஷ் கனகராஜை அடையாளப்படுத்திய கைதி படத்தின் மூலம் தான் நடிகர் கண்ணா வெளியில் தெரிந்தார். அதற்கு முன்பு கண்ணா ரவி ‘வீர’ படத்தில் நடித்திருந்தாலும் கைதி படத்தில் காலேஜ் ஸ்டுடென்ட் ஆக அஜாஸ் அகமது என்ற கேரக்டரில் நடித்தார். இதில் கண்ணா ரவி தன்னுடைய காதலியுடன் போலீஸாரால் கைது செய்யப்பட்டு அதன் பின் அந்த போலீஸ் ஸ்டேஷனில் நடந்த ஆபரேஷனில் கண்ணா ரவி தன்னுடைய காதலியிடம் காதலை வெளிப்படுத்திவிட்டு உயிர் விட்டு விடுவார். அந்த காட்சி இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாது. அந்த அளவிற்கு உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தினார். லோகேஷ் இந்த படத்தில் கண்ணா ரவிக்கு கொடுத்த வாய்ப்பு தான் அடுத்தடுத்து இவரை தேடி நல்ல நல்ல கதைகள் வர துவங்கியது.

மண்டேலா: இரண்டு வெவ்வேறு சாதிகளிலிருந்து இரு பெண்களை திருமணம் செய்து கொண்ட சங்கிலி முருகனின் முதல் மனைவியின் மகன் சுந்தர் மற்றும் இரண்டாவது மனைவியின் மகன் கண்ணா ரவி இருவரில் யார் ஊராட்சி ஒன்றிய தலைவராகுவார்கள் என்பதுதான் போட்டி. இதனை சாதாரண சலூன் கடை வைத்திருக்கும் யோகி பாபுவின் ஓட்டு தான் முடிவு பண்ணும். என்னதான் படத்தில் யோகி பாபு தான் ஹீரோ என்றாலும் அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் சுந்தர், கண்ணா ரவி இருவரும் நடித்துள்ளனர்.

சாணி காகிதம்: கான்ஸ்டபிள் மனைவி, ஒரு மகளுடன் எளிமையான வாழ்க்கையை நடத்தக்கூடிய சராசரி கணவராக தான் சாணி காகிதம் படத்தில் மாரி என்ற கேரக்டரில் கண்ணா ரவி நடித்தார். மில் வேலை செய்யும் கீழ் ஜாதியை சேர்ந்த மாரி, தன்னுடைய முதலாளி தவறாகப் பேசியதற்கு தட்டிக் கேட்கிறார். கோபமடைந்த முதலாளி, மாரி மற்றும் அவருடைய பெண் குழந்தையையும் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருக்கும்போது தீ வைத்து எரித்து விடுவார்கள். தனது குடும்பத்தை அழித்து தன்னையும் நாசம் செய்த கும்பலை மாரியின் மனைவி பொன்னி எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இதில் பாசமான கணவராகவும், சுயமரியாதையை எதிர்பார்க்கக் கூடிய மனிதனாகவும் கண்ணா ரவி தங்களுடைய உணர்வு பூர்வமான நடிப்பை வெளிக்காட்டினார்.

Also read: எந்திரன் சிட்டிக்கு டஃப் கொடுக்கும் கதாபாத்திரம்.. மீண்டும் நெகட்டிவ் கேரக்டரில் சூப்பர் ஸ்டார்

ரசிகர்களின் மனதில் நின்ற கண்ணா ரவி

குருதி ஆட்டம்: அதர்வா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான குருதி ஆட்டம் படத்தில்முத்து என்ற கேரக்டரில் கண்ணா ரவி நடித்தார். இதில் அதர்வாவிற்கும் தாதா மகனான கண்ணா ரவிக்கும் இடையே துளிர்க்கும் எதிர்பாராத நட்பு சிலிர்ப்பை ஏற்படுத்தும். அந்த நட்பால் விளையும் துரோகம், பழிவாங்கல் என படம் முழுக்க பரபரப்பாகவே இருக்கும். இதில் அதர்வாவிற்கு நிகராக கண்ணா ரவியின் கேரக்டர் வலுவாக பேசப்பட்டது.

ரத்தசாட்சி: ஜெயமோகன் எழுதிய கைதிகள் எனும் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் ரத்தசாட்சி. இதில் கைதி புகழ் கண்ணா ரவியுடன் ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்டோர் இணைந்து நடித்தனர். இந்த படத்தில் அப்பு கேரக்டரில் கைதி புகழ் கண்ணா ரவி கச்சிதமாக நடித்தார். வர்க்க பேதங்களை ஒழிக்க ஆயுதப் போராட்டத்தை கையில் எடுத்த அப்பு என்னும் நக்சல்பாரி இளைஞருக்கும், அவரை வேட்டையாட துடிக்கும் போலீசாருக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் ரத்தசாட்சியின் ஒன் லைன் ஸ்டோரி.

இதில் தொழிலாளிகளின் உரிமைகளை பெற ஆயுதம் எடுத்த அப்பு கரும்புத்தொட்ட முதலாளி, சாராய வியாபாரி, கந்துவட்டிகாரர்களுக்கு எதிராக போராட்டம் மேற்கொள்கிறார். இதனால் போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்கவே அரசு தனிப்படை அமைத்து தேடுகிறது. தன்னால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்று காவல்துறையிடம் சரணடைய முடிவெடுக்கும் அப்புவை போலீசார் என்ன செய்தது என்பதை அரசியல் பிழைகளுடன் அழுத்தமற்ற காட்சிகளுடனும் காட்டினர். இந்த படத்தில் அப்புக்கு ஒரு பெண்ணின் மீது காதல் ஏற்படும், ஆனால் அந்த காதல் பிரிவில் முடிந்து விடும்.

Also read: AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாகும் 5 படங்கள்.. தலைவர் 171-ல் ரசிகர்களை உச்சி குளிர செய்ய போகும் ரஜினி

லவ்வர்: காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 9ம் தேதி வெளியான லவ்வர் திரைப்படத்தில் மணிகண்டன் ஹீரோவாக நடித்திருந்தாலும், இதில் மதன் என்ற கேரக்டரில் ஸ்மார்ட் ஐடி பையனாக தனக்கு கொடுக்கப்பட்டதை கச்சிதமாக நடித்தவர் தான் கண்ணா ரவி. கதாநாயகி திவ்யா வேலை பார்க்கும் ஐடி கம்பெனியில் மதன் அவருக்கு டீம் மெட் ஆக இருப்பார். இதிலும் கதாநாயகனுக்கு போட்டியாக செம ஹேண்ட்ஸம் லுக்கில் லவ்வபுல் பாய் ஆக கண்ணா ரவி தெரிவார். இதனாலேயே இந்த படத்தில் லவ்வர்ஸ்களுக்கு இடையே பிரிவு ஏற்படும்.

Trending News