செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

இஷ்டத்திற்கு கதையை மாற்றி பிளாப்பான சிம்புவின் 5 படங்கள்.. இன்று வரை கதறும் ராயப்பன்

சினிமா துறையில் சர்ச்சைக்குரிய நடிகர்களுள் ஒருவராக வலம் வரக்கூடியவர் தான் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் பத்து தல திரைப்படம் வெளியாக உள்ளது. ஆனால் இதற்கு முன் வெளியான படங்களில் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் அவப்பெயரை மட்டுமே சம்பாதித்துள்ளார். அதிலும் சிம்பு தான் நடிக்கும் படங்களின் கதையை இஷ்டத்திற்கு மாற்றி தோல்வியை மட்டுமே கொடுத்துள்ளார். அப்படியாக இவர் நடிப்பில் வெளியாகி பிளாப்பான 5 படங்களை பற்றி பார்க்கலாம்.

விண்ணைத்தாண்டி வருவாயா: கௌதம் மேனன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இதில் சிலம்பரசன், த்ரிஷா, கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் வெவ்வேறு மதங்களை சேர்ந்த இருவருக்கும் இடையே நிகழும் காதலையும், அதனால் எழும் பிரச்சனைகளையும் மையமாக வைத்து இப்படமானது அமைந்துள்ளது. மேலும் இப்படத்தில் சிம்புவின் செயலால் இயக்குனர் கௌதம் மேனன் உடன் பல்வேறு மன கசப்புகள் உருவானது. இருந்தாலும் கூட தற்பொழுது சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள பத்து தல திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

Also Read: அதிரிப்புதிரியாக வெளிவந்த பத்து தல முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா?

வானம்: கிரிஷ் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வானம். இதில் சிலம்பரசன், பரத், அனுஷ்கா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் சிம்புவிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் குறைந்த அளவிலேயே படத்தின் காட்சிகள் ஆனது அமைக்கப்பட்டிருந்தது. இதனால் படத்தின் இயக்குனருடன் சிம்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இவர்களுக்குள் மன சங்கடம் உருவானது.

போடா போடி: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் போடா போடி. இதில் சிம்பு உடன் வரலட்சுமி சரத்குமார் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். அதிலும் சிம்பு இந்தப் படத்தின் படப்பிடிப்பின் பொழுது சரிவர வராமல் இழுத்தடித்தும், காலம் தாழ்த்தியும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் மற்ற பிரபலங்கள் மத்தியில் அவப்பெயரை சம்பாதித்தார். இதனால் இயக்குனருக்கும் சிம்புக்கும் பல்வேறு மன கஷ்டங்களை உண்டானது.

Also Read: சிம்பு படத்தில் இணைந்துள்ள பிரபல நடிகரின் மனைவி.. திருமணம், குழந்தைக்கு பின் ரீ என்ட்ரி கொடுக்கும் ஹீரோயின்

அச்சம் என்பது மடமையடா: கௌதம் மேனன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான காதல் கலந்த அதிரடி திரைப்படம் ஆகும். இதில் சிலம்பரசன் உடன் மஞ்சிமா மோகன் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பில் சரியான நேரத்தில் கலந்து கொள்ளாமல் காலம் தாழ்த்தியதால், மற்ற பிரபலங்கள் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்தியது. இதனால் சிம்புவின் பெயர் பெரிதும் கெட்டுப் போனது என்றே சொல்லலாம்.

AAA: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்  2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இதில் சிம்பு  உடன் தமன்னா, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இந்தப் படத்தின் கதையை சிம்பு தான் இஷ்டத்திற்கு மாற்றியதால் இந்தப் படமானது ரசிகர்கள் மத்தியில் படுதோல்வியை சந்தித்தது. இதனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் இன்றுவரையிலும் சிம்புவால் பல கஷ்டங்களை சந்தித்து வருகிறார்.

Also Read: சத்தமில்லாமல் வளர்ந்து வரும் ஹீரோ.. சிம்பு இடத்திற்கு வந்த ஆபத்து

Trending News