புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கோவை சரளா கவுண்டமணி ஜோடியாக நடித்த 5 படங்கள்.. ஜப்பானில் டாம் அண்ட் ஜெரியாக செய்த ரகளை

Comedy Actor Goundamani and Kovai Sarala: கலக்கல் காமெடிக்கு மன்னனாக நக்கல் நையாண்டியை செய்து வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் தான் கவுண்டமணி. முக்கியமாக செந்திலுடன் அடிக்கும் லூட்டியே மறக்கவே முடியாத அளவிற்கு இவர்கள் இருவரும் சேர்ந்து எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறார்கள். அதில் கவுண்டமணி காமெடிக்கு இணையாக பெயர் பெற்றவர் தான் கோவை சரளா. அப்படிப்பட்ட இவர்கள் இருவரும் சேர்ந்து ஜோடி போட்டு நடித்த படங்களை பற்றி பார்க்கலாம்.

ஜப்பானில் கல்யாணராமன்: எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு ஜப்பானில் கல்யாணராமன் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமலஹாசன், ராதா, கவுண்டமணி, கோவை சரளா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கவுண்டமணி மயில்சாமியாகவும், கோவை சரளா முப்பாத்தா கேரக்டரில் கணவன் மனைவியாக நடித்திருப்பார்கள். இப்படத்தில் இவருடைய காம்பினேஷன் ரொம்பவே பர்ஃபெக்ட்டாக ரசிக்கும் படியாக இருக்கும். இதில் இவர்கள் இருவரும் கொங்கு பாஷையில் பேசும் அழகே சூப்பராக இருக்கும்.

Also read: கவுண்டமணிக்கு எதிராக களம் இறக்கப்பட்ட காமெடி நடிகர்.. பயில்வான் சொன்ன சீக்ரெட்

சின்னவர்: கங்கை அமரன் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு சின்னவர் திரைப்படம் வெளிவந்தது. இதில் பிரபு, சந்திரசேகர், கஸ்தூரி, கவுண்டமணி மற்றும் கோவை சரளா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதில் கவுண்டமணி மற்றும் கோவை சரளா கணவன் மனைவியாக நடித்து மீனவர்கள் வாழ்க்கையை நகைச்சுவையாக வாழ்ந்து காட்டி இருப்பார்கள்.

வைதேகி காத்திருந்தாள்: ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், ரேவதி, கவுண்டமணி, செந்தில் மற்றும் கோவை சரளா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கவுண்டமணி, ஆல் இன் ஆல் அழகுராஜா சைக்கிள் கடையை வைத்துக்கொண்டு செந்திலுடன் காமெடியை கலக்கியிருப்பார். இவரது மனைவியாக கோவை சரளா நடித்த முதல் படம்.

Also read: கவுண்டமணி என் வாழ்க்கையை நாசமாக்கிட்டாரு.. அண்ட புளுகு நடிகையின் முகத்திரையை கிழித்த பயில்வான்

திருமதி பழனிச்சாமி: ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு திருமதி பழனிச்சாமி திரைப்படம் வெளிவந்தது. இதில் சத்யராஜ், சுகன்யா, கவுண்டமணி, ஆர் சுந்தரராஜன் மற்றும் கோவை சரளா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கவுண்டமணியின் காதலியாக பள்ளி ஆசிரியராகவும், சேலம் அன்னக்கிளியாகவும் கோவை சரளா நடித்திருப்பார்.

தழுவாத கைகள்: ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு தழுவாத கைகள் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், அம்பிகா, கவுண்டமணி, செந்தில் மற்றும் கோவை சரளா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கவுண்டமணி கோவை சரளா கணவன் மனைவியாக நடித்திருப்பார்கள். இதில் கோவை சரளாவின் தம்பியாக செந்தில் நடித்து இவர்கள் இருவரும் சேர்ந்து கவுண்டமணியை கலாய்க்கும் விதமாக இப்படம் அமைந்திருக்கும்.

Also read: கோவை சரளாவை ஓவர்டெக் செய்ய வரும் நடிகை.. ஹீரோயின் சப்ஜெக்ட்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் அறம் இயக்குனர்

Trending News