திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரெண்டே நாளில் தியேட்டரிலிருந்து தூக்கி எறியப்பட்ட 5 படங்கள்.. ஒரு நாள் கூட தாக்கு பிடிக்காத கார்த்திக் படம்

பணத்தைக் கொட்டி படம் எடுத்தாலும் அந்த படம் வெற்றி பெற்றால்தான் தயாரிப்பாளர்கள் மற்றும் பிரபலங்களும் வளர முடியும். ஆனால் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களின் குறிப்பிட்டு சொல்லக்கூடிய இந்த 5 படங்களும் இரண்டு நாட்கள் கூட திரையரங்கில் ஓடாமல் தூக்கி எறியப்பட்டது. அதிலும் ஒரு நாள் கூட தாக்குப் பிடிக்காமல் கார்த்தி நடித்த படம் ஒன்று ரசிகர்களிடம் செல்லுபடியாகாமல் போனது,

அல்லி அர்ஜுனா: 2002 ஆம் ஆண்டு சரணின் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் மனோஜ் கே பாரதி கதாநாயகனாக நடித்திருந்தார். ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசை அமைத்தாலும் திரையரங்கில் ஒரு சில நாட்கள் கூட ஓடாமல் படு தோல்வியை சந்தித்தது.

யான்: 2014 ஆம் ஆண்டு ரவி கே சந்திரன் இயக்க, ஜீவா, துளசி நாயர், தம்பி ராமையா, கருணாகரன், அர்ஜுனன், நாசர்,  ஜெயப்பிரகாசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். ஜீவா நடித்த அதிரடி த்ரில்லர் படமான வெளியான இந்த படம், ஜீவா நடிப்பின் படுதோல்வியை சந்தித்த படங்களின் லிஸ்டில் சேர்ந்தது. திரையரங்கில் ஒரு வாரம் கூட தாக்குப் பிடிக்காத இந்தப்படம் சோசியல் மீடியாவில் ரசிகர்களால் கிழித்து தொங்க விடப்பட்டது.

Also Read: தெலுங்குப் பட ரீமேக்கில் கமிட்டாகி கெத்து காட்டும் சந்தானம்.. அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கும் 5 தமிழ் படங்கள்!

தேவ்: 2019 ஆம் ஆண்டு காதலர் தினத்தில் காதலர்களுக்கு விருந்தாக கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் தேவ், நடிகர் கார்த்தி இப்படத்தில் பிரகாஷ்ராஜுக்கு மகனாகவும் ரகுல் ப்ரீத்தி சிங்கிற்கு ஜோடியாகவும் நடித்து வெளியான இந்தப் படம் பெரிய ஏமாற்றத்தை தந்தது. இந்த படம் ரசிகர்களிடம் ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்டுகளை பெற்று ஒரு நாள் கூட திரையரங்கில் முழுசா ஓட முடியாத நிலை ஏற்பட்டது.

Also Read: தேவ் திரை விமர்சனம்.. இந்தமுறை தப்புவாரா கார்த்தி

பாரிஸ் ஜெயராஜ்: 2021 ஆம் ஆண்டு ஏ 1 இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் மீண்டும் சந்தானம் இணைந்த படம் தான் பாரிஸ் ஜெயராஜ். கானா பாடகர் ரோலில் சந்தானம் நடித்துள்ளார். சந்தோஷ் நாரயணன் இப்படத்திற்கும் இசை அமைத்துள்ளார். ப்ருத்விராஜ், அனைகா சோதி, மொட்டை ராஜேந்திரன், டைகர் தங்கதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர். லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளனர். இந்த படம் ரசிகர்களிடம் நெகட்டிவ் கமெண்டுகளை குவித்ததுடன் திரையரங்குகளில் சில நாட்கள் கூட போடாமல் படு தோல்வியை சந்தித்தது.

ராஜபாட்டை: 2021 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் முழுக்க முழுக்க சென்னையில் நடக்கும் கதையாகவே படமாக்கி இருப்பார்கள். ராஜபாட்டை படத்தில் லட்டு லட்டு ரெண்டு லட்டு எனும் பாடல் இடம் பெற்றிருக்கும் ஆனால் படத்திற்கும் பாடலுக்கும் சம்பந்தமாகவே இருக்காது.

படம் வெளிவந்த பிறகு படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் சுசீந்திரன் தேவையில்லாத செலவுகளை படத்திற்கு செய்துள்ளார் என குற்றம் சாட்டினார். இப்படி கலவையான விமர்சனங்கள் இந்தப் படத்திற்கு குவிந்தது மட்டுமல்லாமல் திரையரங்கில் ஒரு வாரம் கூட தாக்குப் பிடித்து ஓடாமல் போனது.

Also Read: பாரிஸ் ஜெயராஜ் படம் எப்படி இருக்கு? fdfs பார்த்த பின் சந்தானத்தின் மகன் சொன்ன விமர்சனம்

இவ்வாறு இந்த ஐந்து படங்களும் போட்ட காசை கூட எடுக்க முடியாமல் பிளாப் ஆனது. அதிலும் தற்போது திரையரங்கில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கார்த்தியின் படத்துக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

Trending News