வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

ஆடியோ உரிமத்தில் அதிக வசூல் வேட்டை ஆடிய 5 படங்கள்.. பொன்னியின் செல்வனை பின்னுக்கு தள்ளிய லியோ

Ponninselvan-Leo: பிரம்மாண்டத்தின் படைப்பாய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் தான் லியோ. இந்நிலையில் ஆடியோ உரிமத்தில் அதிக வசூல் வேட்டையாடிய 5 படங்கள் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

விஜய்யின் படங்கள் என்றாலே அப்படத்தில் இடம்பெறும் பாடலுக்கான முக்கியத்துவம் கொடுக்கப்படும். அவ்வாறு பாடல்களால் வெற்றி கண்ட படங்களும் தமிழ் சினிமாவில் உண்டு. அதிலும் முக்கியமாக அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களின் பாடல்களை உரிமம் பெற போட்டா போட்டி நிலவி வருகிறது.

Also Read: டாக்டர், டான் வரிசையில் இணைந்த மாவீரன்.. மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

சமீபத்தில் களம் இறங்கிய, அதிக பட்ஜெட் படங்கள் ஆன பீஸ்ட், வாரிசு, பொன்னியின் செல்வன், லியோ, தளபதி 68 போன்ற படங்களின் பாடல்களை ஆடியோ ரைட்ஸ் எடுக்க பல கோடிகளை வாரி இறைத்தனர். அவ்வாறு ஆடியோ ரைட்ஸ் மார்க்கெட் மிகவும் போட்டா போட்டி போடும் நிலையில் இருந்து வருகிறது.

இப்படத்தின் பாடலை வாங்கியே தீர வேண்டும் என அதிக கோடிகளை கொடுக்கவும் முன் வருகின்றனர். தற்போது இது மூலமாகவும் வசூல் வேட்டை நடைபெற்று வருகிறது. அவ்வாறு நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த படமான பீஸ்ட் படத்தின் பாடல்களை சன் டிவி சுமார் 10 கோடிக்கு விநியோகம் செய்தது. அதைத் தொடர்ந்து பேமிலி என்டர்டைன்மென்ட் மூவியாய் வெளிவந்த வாரிசு படத்தின் பாடலை டி சீரீஸ் 10கோடிக்கு விநியோகம் செய்தது.

Also Read: ஊருக்கு முன் உத்தமன் வேஷம் போட்ட பிக்பாஸ் விக்ரமன்.. போட்டோ ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய காதலி

அதைத் தொடர்ந்து பிரம்மாண்டத்தின் உச்சமாய் பார்க்கப்பட்ட மணிரத்னம் படமான பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 படத்திற்கான பாடல்களை டிப்ஸ் மியூசிக் 24 கோடிக்கு விநியோகம் செய்தது. மேலும் சோனி மியூசிக், லியோ படத்தின் பாடலை சுமார் 16 கோடிக்கு விநியோகம் செய்து உள்ளது.

இந்த வரிசையில் நம்பர் ஒன் இடத்தில் தளபதி 68 பிடித்துள்ளது. இன்னும் படப்பிடிப்பு கூட தொடங்கப்படாத நிலையில் இப்படத்தின் இசையுரிமத்தை டி சீரிஸ் சுமார் 35 கோடிக்கு விநியோகம் செய்துள்ளது. இதை பார்க்கையில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த பொன்னின் செல்வன் பாடல்களை விட விஜய் பட பாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Also Read: வந்த சுவடே தெரியாமல் ஊத்தி மூட போகும் விஜய் டிவி சீரியல்.. டிஆர்பி இல்லாததால் எடுத்த அதிரடி முடிவு

- Advertisement -spot_img

Trending News