சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

எந்த கேரக்டர் கொடுத்தாலும் பின்னும் 5 நட்சத்திரங்கள்.. கமல் சர்க்கிலில் இவர்கள் இல்லாத படங்களே இல்லை

Kamal Haasan: தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் தான் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதற்கு பக்காவாக பொருந்தி விடுவார்கள். வில்லத்தனம் காட்டி மிரட்டவும் செய்வார்கள், அதே நேரத்தில் சென்டிமென்ட் காட்சிகளில் நடித்து நம்மை கதற வைக்கவும் செய்வார்கள். அப்படி உலகநாயகன் கமலஹாசனின் வட்டாரத்தில் ஐந்து மகா கலைஞர்கள் இருக்கிறார்கள். எப்படிப்பட்ட கேரக்டர்கள் கொடுத்தாலும் நடிப்பில் பின்னி பெடல் எடுக்கும், இவர்கள் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம்.

எந்த கேரக்டர் கொடுத்தாலும் பின்னும் 5 நட்சத்திரங்கள்

டெல்லி கணேஷ்: நடிகர் டெல்லி கணேஷ் கமலின் புன்னகை மன்னன், நாயகன், அவ்வை சண்முகி, காதலா காதலா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். நாயகன் படத்தில் கமலுடன் சேர்ந்து படு சீரியஸாக நடித்த டெல்லி கணேஷ் தான், அவ்வை சண்முகி படத்தில் லேடி கேட்டவில் இருக்கும் கமலுடன் ரவுசு பண்ணியிருப்பார். நிறைய படங்களில் அப்பா கேரக்டர்களில் நடித்து நம் மனதை கலங்கடிக்க செய்த டெல்லி கணேஷ், வில்லன் கேரக்டரிலும் மிரள விட்டிருப்பார்.

சத்யராஜ்: நடிகர் சத்யராஜ் வில்லனாக இருந்து ஹீரோவாக மாறிய பன்முக திறமை கொண்ட நடிகர். இப்போது தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸிலும் எந்தவிதமான கேரக்டர் கொடுத்தாலும் அதை பக்காவாக நடிக்க கூடியவர். சத்யராஜ் மற்றும் கமல் நடிப்பில் காக்கி சட்டை படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அப்போது ரஜினி மற்றும் கமல் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு சத்யராஜுக்கு பட வாய்ப்புகளை கொடுக்க முன் வந்தார்கள்.

Also Read:நடிச்ச 10 படத்துல ஒன்னு கூட ஓடல, அதுக்குள்ள ஓவர் ஆட்டிட்யூட்.. எம்எஸ் பாஸ்கர் சர்டிபிகேட் கொடுத்த இளம் ஹீரோ

நாசர்: நடிகர் நாசர் போல் நடிப்பதற்கு இன்னொரு நடிகன் பிறந்து தான் வர வேண்டும். அடிதடி சண்டை காட்சிகள் இல்லாமல் தன்னுடைய பார்வையிலேயே மிரட்டக்கூடிய வில்லன் இவர். மகளிர் மட்டும், அவ்வை சண்முகி போன்ற படங்களில் காமெடிகளும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார். இவருடைய நடிப்பில் எம்டன் மகன் படம் யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.

ஹனீபா: கொச்சி ஹனீபா என்று தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சயமான இவர் நிறைய நல்ல கேரக்டர்களின் நடித்திருக்கிறார். கமலுடன் இணைந்து மகாநதி படத்தில் இவர் நடித்த கேரக்டர் யாராலும் மறக்க முடியாது. ரஜினியுடன் எந்திரன், அஜித்துடன் கிரீடம் போன்ற படங்களில் முக்கியமான கேரக்டர்களின் நடித்திருப்பார். மதராசபட்டினம் படத்தில் காமெடியிலும் கலக்கி இருப்பார்.

நெடுமுடி வேணு: நெடுமுடி வேணு திறமையான நடிகராக இருந்தாலும் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடிக்க மாட்டார். இவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் ரொம்பவே வித்தியாசமாக இருக்கும். சங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படத்தில் நடித்த இவர் அந்நியன் படத்தில் விக்ரமுக்கு அப்பாவாக நடித்திருப்பார். கமல் இந்தியன் 2 படத்திலும் இவருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார். படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே நெடுமுடி வேணு இறந்து விட்டார்.

Also Read:எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் ஊறிப் போய் நடிக்கும் 5 பிரபலங்கள்.. கமலையே பிரமிக்க வைத்த திரிபுரசுந்தரி

Trending News