புதன்கிழமை, ஜனவரி 22, 2025

நரம்பு பொடைக்க தேசப்பற்றை உணர்த்தும் 5 படங்கள்.. போராட்டத் தியாகியாகவே மாறி அசத்திய கமல்

Actor Kamal: பல படங்களை கைவசம் வைத்து பட்டையை கிளப்பி வரும் உலக நாயகனின் இந்தியன் 2 படத்தை கொண்டாட காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் தேசப்பற்றை உணர்த்தும் விதமாய் இவர் மேற்கொண்ட நடிப்பை பற்றி இத்தொகுப்பில் காண்போம்.

நம்மில் இருக்கும் தேசபக்தியை உணர்த்தும் விதமாய் அமைந்த படங்கள் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றன. அன்று முதல் இன்று வரை இது போன்ற படங்களுக்கு மவுசு குறையவில்லை என்றே கூறலாம். இதுபோன்று நரம்பை பொடைக்க வைக்கும் நடிப்பை வெளிப்பாட்டிய நடிகர்களும் தமிழ் சினிமாவில் உண்டு.

Also Read: ஓரளவுக்கு மேல பேச்சே இல்ல வீச்சு தான்.. சொல்லி அடித்த சூப்பர் ஸ்டார், மிரட்டும் 5-ம் நாள் வசூல்

இன்று 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாம், நம் முன்னோர்களை நினைவு கொள்ள செய்யும் விதமாய், அவர்கள் மேற்கொண்ட போராட்டத்தை சித்தரிக்கப்படும் வகையில் வெளிவந்த படங்கள் நம் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது. அந்த வகையில் அர்ஜூன், ரஞ்சிதா நடிப்பில் வெளிவந்த ஜெய்ஹிந்த் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வந்தது.

பயங்கரவாத தாக்குதலை தடுக்கும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாய் அர்ஜுன் மேற்கொண்ட நடிப்பு படத்திற்கு கூடுதல் சிறப்பாய் அமைந்திருக்கும். அதைத்தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவான படம் தான் இந்தியன். கமல், மனிஷா கொய்ராலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.

Also Read: இமையமலையிலிருந்து வந்த ஸ்பீடில் ரஜினி ஆரம்பிக்க போகும் தலைவர்-171.. ரிலீசுக்கு நாள் குறித்த லோகேஷ்

சுதந்திரப் போராட்டத்தை சித்தரிக்கும் விதமாய் எடுக்கப்பட்ட இப்படத்தில் போராட்டத் தியாகியாக தன் தத்ரூபமான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார் கமல். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிப்பில் வெற்றி கண்ட படம் தான் ரோஜா. காஷ்மீர் விவாகரத்தை முன்னிட்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் பயங்கரவாதிகள் இடம் சிக்கி தவிக்கும் தன் கணவனை மீட்க போராடும் மனைவியின் பாசத்தை உணர்த்தும் விதமாய் அமைந்து மக்களின் பேராதரவை பெற்றது.

அவ்வாறு கலைப்புலி தாணு தயாரிப்பில் சுதந்திரப் போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் தான் சிறைச்சாலை. இப்படத்தில் மோகன்லால், பிரபு, தபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். சிறையில் கைதிகள் மேற்கொள்ளும் கொடுமைகளை வெளிப்படுத்தும் இப்படம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் மதராசப்பட்டினம். இப்படத்தில் ஆர்யா, எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தை நினைவூட்டும் விதமாய் இப்படம் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஒரு தயாரிப்பாளரா இந்த 5 படங்களால் தோற்றுப் போன சன் பிக்சர்ஸ்.. ரெண்டு அட்ட ப்ளாப் கொடுத்த விஜய்

Trending News