சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

Mr & Mrs சின்னத்திரையில் உறுதியான 5 ஜோடி.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எல்லா ரியாலிட்டி ஷோக்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை கடந்த மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்தது. விரைவில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையின் நான்காவது சீசன் தொடங்கி உள்ளது.

மேலும் கடந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆக சரத் மற்றும் கிருத்திகா வெற்றி பெற்றனர். இந்நிலையில் தற்போது இந்த சீசனில் கலந்துகொள்ளும் 5 ஜோடிகளின் பெயர் வெளியாகியுள்ளது. முதலாவதாக சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடரில் வில்லியாக காயத்ரி கதாபாத்திரத்தில் நடித்த ரேகா அவரது கணவர் கிருஷ்ணாவுடன் பங்கு பெறுகிறார்.

தற்போது இவர் விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் என்ற தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த ஜோடியை தொடர்ந்த பாரதிகண்ணம்மா தொடரில் வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஃபரினா தனது கணவருடன் பங்குபெற உள்ளார்.

சமீபத்தில் இந்த ஜோடிக்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் முதல் சீசனிலும் இவர்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைத் தொடர்ந்து பாரதிகண்ணம்மா தொடரில் இருந்து மற்றொரு நடிகரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

அதாவது இத்தொடரில் வெண்பாவிற்கே டாப் கொடுத்து துர்கா கதாபாத்திரத்தில் நடித்த பிரவீன் தேவசகாயம் தனது மனைவியுடன் கலந்து கொள்ளயுள்ளார். இவர்களுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றது. இவர் ஈரமான ரோஜாவே தொடரில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானார்.

மேலும் பாரதிகண்ணம்மா தொடரில் வில்லனாக நடித்த யோகியும் தனது மனைவியுடன் கலந்து கொள்கிறார். இவர் வேலைக்காரன் தொடரிலும் நடித்திருந்தார். இவரை தொடர்ந்து ஐந்தாவது ஜோடியாக கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான சிங்கப்பூர் தீபன் தனது மனைவியுடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். தற்போது வரை இந்த ஐந்து ஜோடிகள் மட்டுமே உறுதியாகியுள்ளது.

Trending News