டிசம்பர் 12 பிறந்தநாள் கொண்டாடும் 6 நட்சத்திரங்கள்.. சூப்பர் ஸ்டாருடன் இணையும் கிரிக்கெட் ஜாம்பவான்

சாதாரணமாக பிரபலங்களின் பிறந்தநாளை ரசிகர்கள் விழா போல கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதுவும் டிசம்பர் 12 தமிழ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டம் தான். ஏனென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் இன்று. இதே நாளில் இன்னும் 5 பிரபலங்கள் பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள்.

ரஜினிகாந்த் : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 72 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருடைய ஒவ்வொரு பிறந்த நாளன்று ரசிகர்கள் ரஜினியின் வீட்டின் முன் ஆர்ப்பரிப்பார்கள். அதேபோல் இன்றும் ரசிகர்கள் போயஸ் கார்டனில் காத்திருந்த நிலையில் ரஜினி வெளியூர் சென்றிருப்பதால் ஏமாற்றத்தை அடைந்துள்ளனர்.

Also Read : படம் பார்க்க மட்டும் நாங்கள் வேண்டுமா.? ஏமாற்றத்தைக் கொடுத்த ரஜினிகாந்த்

சேரன் : பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான சேரன் இன்று தனது 52 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவர் தவமாய் தவமிருந்து, பொற்காலம் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். மேலும் விஜய் டிவி யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரன் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரத் பவார் : மகாராஷ்டிராவில் நான்கு முறை முதல்வராக பதவி வகித்தவர் சரத் கோவிந்தராவ் பவார். மேலும் கடந்த 2017 ஆம் ஆண்ட இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மபூஷன் விருதை சரத் பவார் பெற்றார். இன்று இவரும் தனது 82 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Also Read : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கடைசி ஹிந்தி படம்.. படையப்பா பாணியில் ஹாட்ரிக் வெற்றி

யுவராஜ் சிங் : கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் தனது 41வது டிசம்பர் 12 ஆம் தேதியன்று கொண்டாடுகிறார். இந்திய அணியின் வீரராக களம் இறங்கிய யுவராஜ் சிங் கிரிக்கெட்டில் பல சாதனைகள் செய்துள்ளார். மொத்தமாக 40 டெஸ்ட்களில் 304 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக யுவராஜ் சிங் விளையாடி உள்ளார்.

டாக்டர் அசோக் : முருகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அசோக். இவர் பிடிச்சிருக்கு, கோழி கூவுது, சித்திரம் பேசுதடி, காக்கி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12 தான் பிறந்துள்ளார். இவர் இன்று தனது 41வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

சௌகார் ஜானகி : பழம்பெரும் நடிகையான சௌகார் ஜானகி இன்று தனது 91 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவர் அந்த காலத்தில் முக்கிய கதாநாயகியாக திகழ்ந்து வந்தார். அதன் பின்பு குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். இவருடைய அசாத்தியமான நடிப்பால் தமிழ் சினிமாவுக்கு பல படங்கள் கொடுத்துள்ளார்.

Also Read : வீடு தேடி வந்த நடிகை.. வாரி கொடுத்து காப்பாற்றிய ரஜினிகாந்த்