ஒரு காலத்தில் கிரிக்கெட் என்றாலையே ஒரு சூதாட்டம் என்ற பெயர் வரும் அளவிற்கு சில வீரர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த போட்டியின் பெயரை கெடுத்து விட்டனர். இந்தியாவில் மூன்று வீரர்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்தது மட்டுமல்லாமல் அவப்பெயர் சம்பாதித்துக் கொண்டு வேறு எதிலும் பங்கு பெறாமல் முடங்கி கிடந்தனர். கிரிகெட் சூதாட்டத்தில் சிக்கிய 5 கிரிக்கெட் வீரர்களின் தொகுப்பு இதோ,
முகமத் அசாருதீன்: சௌரவ் கங்குலி வருகைக்கு முன்னர் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டவர் முஹம்மது அசாருதீன். இவரைப்போல் மணிக்கட்டு மூலம் கிரிக்கெட் விளையாடக்கூடிய வீரர் இன்றுவரை கிடையாது என்றே சொல்லலாம். இவர் ஒருமுறை தென்னாப்பிரிக்கா, இந்தியா சுற்றுப்பயணம் வந்த போது கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு தன் வாழ்க்கையை தொலைத்தார்.
அஜய் ஜடேஜா: இந்தியாவின் அபாயகரமான பேட்ஸ்மேன் இவர் என்று வர்ணனையாளர்கள் போற்றக் கூடிய அளவிற்கு பெயர் பெற்றவர் அஜய் ஜடேஜா. இந்தியாவிற்காக பல போட்டிகளை வென்று கொடுத்த இவர், கேப்டன் அசாருதீன் உடன் இணைந்து லஞ்சப் புகாரில் சிக்கி இந்தியாவின் பெயரை கெடுத்து விட்டார்.
நயன் மோங்கியா: நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கூறிக்கொண்டே இந்தியாவை சீரழித்த கீப்பர் இவர். அசாருதீன், ஜடேஜா இருவருக்கும் துணை நின்று தன் பெயரை கெடுத்துக் கொண்டவர் தான் இந்த மோங்கியா.
வாசிம் அக்ரம்: பந்துவீச வருவதும் தெரியாது போவதும் தெரியாது ஒரு ஓவரை அசால்டாக சீக்கிரமாய் வீசக்கூடிய ஆற்றல் கொண்டவர் அக்ரம். அவரே ஒரு பேட்டியில் உளறி விட்டார் என் நாட்டை தவிர மற்ற நாடுகளில் என்னை தலைசிறந்த பவுலர் என்று கூறுவார்கள். ஆனால் பாகிஸ்தானில் என்னை ஒரு சூழ்ச்சிக்காரன், திருடன் என்று அழைப்பார்கள் என்று கூறி அதிர வைத்து விட்டார்.
ஹன்சி க்ரோஞ்ச்: தென் ஆப்பிரிக்காவின் தலைசிறந்த ஆல்ரவுண்டர். இவர் கேப்டன் பொறுப்பில் இருக்கும்போது அசைக்க முடியாத அணியாக வலம் வந்தது தென்னாப்பிரிக்கா. துரதிர்ஷ்டவசமாக இவர் ஒரு விமான விபத்தில் பலியாகி விட்டார். இவர் லஞ்ச புகாரில் சிக்கி தனது நற்பெயரை கெடுத்துக் கொண்டார்.