2023ஆம் ஆண்டு ஐபிஎல் சக்கை போடு போட்டு வருகிறது. ஆரம்பம் முதலிலேயே விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த சீசனில் சென்னை மற்றும் மும்பை அணிகள் தான் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குத் தகுந்தார் போல் இரு அணிகளும் பலம் வாய்ந்த அணியாக விளங்கி வருகிறது.
இப்படி இருக்கையில் இந்த வருட ஐ பி எல்லை 5 நட்சத்திர வீரர்கள் மிஸ் செய்துள்ளனர். அவர்கள் விளையாட முடியாமல் போனதால் மொத்த அணிக்கும் அது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. முக்கியமான அணியில், முக்கியமான வீரர்கள் இந்த சீசனில் விளையாட முடியாமல் தவித்து வருகின்றனர். அப்படி இந்த ஐபிஎல்லை மிஸ் செய்த 5 வீரர்கள்,
கேன் வில்லியம்சன்: குஜராத் அணிக்கு விளையாடி வரும் வில்லியம்சன் இந்த தொடரில் மூட்டு வலி காரணமாக அந்த அணியில் இருந்து விலகி உள்ளார். ஒரு போட்டிகள் கூட இன்னும் விளையாடவில்லை, விளையாடவும் மாட்டார் என அறிவிக்கப்பட்டது. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
கய்ல் ஜெமிஷன்: சென்னை அணிக்காக எடுக்கப்பட்ட இவர் முதுகு வலி பிரச்சனையில் அவதிப்பட்டு வருகிறார். அதனால் இவர் இந்த ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே பந்துவீச்சில் மோசமாய் இருக்கும் சென்னை அணிக்கு இது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரிஷப் பந்த்: இவர் வேகமாக காரில் சென்று கொண்டு இருக்கும் போது கோர விபத்தில் சிக்கிக்கொண்டார். அதிலிருந்து இவர் பிழைத்ததே பெரிய அதிர்ஷ்டம் தான். பக்கத்தில் உள்ள டீக்கடைக்காரர் பார்த்து இவரை வண்டியில் இருந்து இழுத்துள்ளார். வண்டி முழுவதுமாக எரிந்தது. அதனால் இவருக்கு உடலில் பல இடத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளது .இவரும் இந்த ஐபிஎல் விளையாடவில்லை.
ஜஸ்பிரீத் பும்ரா: இவர் முதுகு வலி காரணமாக கடந்த ஓராண்டுகளாக இந்திய அணியில் விளையாடவில்லை. மும்பை அணிக்காக விளையாடி வரும் இவர் இந்த தொடரில் முதுகு வலி பிரச்சனையால் விலகியுள்ளார்.
ஜானி பாஸ்ட்ரோ: அதிரடி ஆட்டக்காரரான இவர் மூட்டு வலி காரணமாக அணியில் இருந்து விலங்கியுள்ளார். எந்தவொரு போட்டி என்றாலும் மாற்றக்கூடிய திறமை கொண்ட இவர் அணியில் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவு.