செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

2024 ஐபிஎல் இல் சோபிக்காத 5 வீரர்கள்.. மும்பை அணியவே கேள்விக்குறியாக்கிய மூன்று வீரர்கள்

players not in form 2024 IPL: ஹர்திக் பாண்டியா: ஒரு காலத்தில் மும்பை அணியை கடப்பாரை அணி என்று தான் கூறுவார்கள் அந்த அளவுக்கு பேட்டிங் யூனிட்டில் வலுவாக இருக்கும். ஆனால் இப்பொழுது தலைகீழாக மாறி உள்ளது. அதிரடி ஆட்டக்காரர்கள் எல்லாம் சொதப்பி வருகின்றனர் குறிப்பாக ஹர்திக் பாண்டியா. ஒரு போட்டியில் கூட சரியாக விளையாடவில்லை

சூரியகுமார் யாதவ்: ஐபிஎல் போட்டிகளில் 360 டிகிரி நாயகன் என பெயர் எடுத்த இவர் தொடர்ந்து தனது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மும்பை அணி விளையாடும் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு திணறி வருகிறது. இதனால் அந்த அணி அடுத்த கட்ட போட்டிகளுக்கு முன்னேறுமா என்று தெரியவில்லை.

ரோகித் சர்மா: தன்னை கேப்டன் பொறுப்பில் இருந்து விலக்கிக் கொண்டு இந்த ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். இதன் மூலம் பொறுப்பு சுமை இல்லாமல் நன்றாக விளையாடுவார் என்று பார்த்தால் சோபிக்க தவறி வருகிறார்.

மும்பை அணியவே கேள்விக்குறியாக்கிய மூன்று வீரர்கள்

மிச்சல் ஸ்டார்க்: இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் மிச்சல் ஸ்டார்க்.கிட்டத்தட்ட 24 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை எழுத்தில் எடுத்தது. ஆனால் எதிரணிக்கு ரண்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார் மிச்சல் ஸ்டார்க்.

கிளன் மேக்ஸ்வெல்: ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் மேக்ஸ்வெல் 4 போட்டிகளில் வெறும் 31 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார் . இவரை அந்த அணி 11 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது. தொடர்ந்து இவர் தனது மோசமான பங்களிப்பை அளித்து வருகிறார்.

Trending News