பொதுவாக இந்திய அணி வீரர்கள் தேர்வில், தலைமை வகிப்பவர்களை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது பெரிய மர்மமாகவே இருக்கிறது. அனுபவம் வாய்ந்த வீரர்களை, நல்ல நேர்மையாக நடப்பவர்களை தான் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் கொஞ்ச காலமாகவே இந்திய அணி தேர்வாளர்கள் சரியில்லை என்றே கூறலாம். முக்கியமாக சீனியர் வீரர்கள் சொல் பேச்சு கேட்டு நடப்பவர்களையே தேர்வு குழு தலைவராக அமர்த்துகின்றனர். அப்படி மோசமாய் அமைந்த தேர்வுக்குழுவின் 5 பேர்.
சேத்தன் சர்மா: 2020 முதல் 2023 வரை இவர் தான் தேர்வுக்குழு தலைமை பதவியில் இருந்து வருகிறார். இவர் தேவையில்லாத பேச்சுக்களை சமீபத்தில் பேசி மாட்டிக் கொண்டார். இவர் தேர்ந்தெடுத்த இந்திய அணி 2021 ஐசிசி உலகக் கோப்பையில் முதல் ரவுண்டிலே வெளிவந்தது. அதுமட்டுமின்றி 2022 ஆசிய கோப்பையையும் பறிகொடுத்தது.
![Chetan-sharma](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/03/Chetan-sharma-Cinemapettai.jpg)
திலீப் வெண்சார்கர்: இவர் 2006 ஆம் ஆண்டு இந்திய அணி தேர்வு குழு தலைவராக செயல்பட்டு வந்தார். இவர் தேர்வு செய்த அணி 2007 உலகக் கோப்பையில் பங்களாதேஷ் அணியிடமே தோற்றது. இது அனைவருக்கும் ஆச்சர்யம் அளித்தது ஏனென்றால் 2003 ஆம் ஆண்டு இந்தியா உலகக்கோப்பை ரன்னர் பட்டத்தை பெற்றது.
![Dilip-Vensarkar](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/03/Dilip-Vensarkar-cinemapetti.jpg)
சந்திப்பாட்டில்: 2012 முதல் 2016 வரை வீரர்கள் தேர்வு குழுவில் இடம் பெற்று இருந்தார் பாட்டில். இவருடைய தலைமை இந்திய அணிக்கு ஒரு தகுதி இல்லாத ராஜாங்கமாக அமைந்தது. 2014, 2015, T20 உலக கோப்பையை இந்திய அணி தோற்றது. அதுமட்டுமின்றி 2015- 50 ஓவர் உலகக் கோப்பையும் தோற்றது.
![sandeep-patil](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/03/sandeep-patil-Cinemapettai.jpg)
மொகிந்தர் அமர்நாத்: இவர் 2011க்கு பிறகு இந்திய அணி தேர் குழுவில் இடம் பெற்று இருந்தார். இவர் மகேந்திர சிங் தோனியை டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெறுமாறு அறிவுரை வழங்கினார். அப்படி தோனியை ஒதுக்கிய பிறகு இவர் செலக்ட் செய்த அணி படுதோல்வி அடைந்து வந்தது.
![mohinder-Amarnath](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/03/mohinder-Amarnath-Cinemapettai.jpg)
எம்எஸ்கே பிரசாத்: பத்து ஒரு நாள் போட்டி கூட விளையாடாத இவரை இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக அமர்த்தியது ஒரு பெரும் பேசு பொருளாக மாறியது. இவரும் அதற்கு தகுந்தார் போல் தான் செயல்பட்டார். விராட் கோலிக்கு ஆதரவாக அவர் எடுக்கும் முடிவுகளுக்கு இவர் தலை சாய்த்து, இந்திய அணியை அதர பாதாளத்திற்கு தள்ளினார்.
![Msk-prasad](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/03/Msk-prasad-Cinemapettai.jpg)