திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

மார்க்கெட் குறையாத 5 முத்தின கத்திரிக்காய் நடிகைகள்.. மறுபிறவி எடுத்து வந்த குந்தவை

Trisha: சினிமாவை பொறுத்த வரைக்கும் ஒரு ஹீரோ 50 ஆண்டுகளுக்கு மேல் கூட அதே இடத்தில் இருந்து விடலாம். ஆனால் நடிகைகள் மார்க்கெட் என்பது ஒரு குறுகிய காலகட்டத்திலேயே முடிந்து விடும். 30 வயதை தாண்டி விட்டாலே அவர்கள் சினிமாவில் ஓரம் கட்டப்பட்டு விடுவார்கள். ஆனால் இந்த ஐந்து நடிகைகள் மட்டும் 40 வயதை நெருங்கியும் இன்றுவரை மார்க்கெட் குறையாமல் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். அவர்கள் யார் என்று பார்க்கலாம்.

5 முத்தின கத்திரிக்காய் நடிகைகள்

நயன்தாரா: நடிகை நயன்தாராவுக்கு 40 வயது ஆகிவிட்டது. திருமணத்திற்கு பிறகு தான் இவருக்கு பாலிவுட் வாய்ப்புகள் குவிய தொடங்கியிருக்கிறது. கிட்டதட்ட 19 வயதில் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கியவர் இன்றுவரை முன்னணி நடிகையாக தான் வலம் வருகிறார். எத்தனையோ இளம் நடிகைகள் சினிமாவுக்கு இப்போது அறிமுகமாகி இருந்தாலும், நயன்தாராவின் நேர்த்தி என்பது அவர்கள் யாருக்குமே வரவில்லை. அந்த அளவுக்கு எல்லா விதத்திலும் தன்னை அப்டேட் ஆக வைத்திருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார்.

அனுஷ்கா: இந்திய சினிமாவில், வரலாற்று கதைகளில் நடிப்பதற்கு சரியான நடிகை அனுஷ்கா தான். ராணி கெட்டப், சாமி கெட்டப் என எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருப்பார். பாகுபலி படத்தில் இவர் நடித்த தேவசேனா கேரக்டர் மிகப்பெரிய அளவில் ரீச் கொடுத்தது. அனுஷ்கா கிட்டத்தட்ட 40 வயதை தாண்டியும் இன்றுவரை அவருக்கான கிரேஸ் இந்திய சினிமா ரசிகர்களிடையே குறைந்த பாடு இல்லை. அந்த அளவுக்கு அவர் தன் அழகையும் மெருகேற்றி வருகிறார்.

Also Read:என்னது, சமந்தாவுக்கு மீண்டும் டும் டும்மா.. வாரிசு நடிகருடன் காட்டும் நெருக்கம்

திரிஷா: 40 வயதை தாண்டிய திரிஷா 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு மறுபிறவி எடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட பத்து வருடங்களாக எந்த பட வாய்ப்புமே இல்லாமல் இருந்த அவர், பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்தது முதல் மீண்டும் இழந்த இடத்தை பிடித்து விட்டார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் முன்பு இருந்ததை விட இப்போது அவருக்கு மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு தானாக தேடி வந்து அமைந்து விட்டது.

சாய் பல்லவி: நடிகை சாய் பல்லவிக்கு கிட்டத்தட்ட 30 வயது தாண்டி விட்டது. இப்போது பார்த்தாலும் 2015 ஆம் ஆண்டில் பார்த்த மலர் டீச்சர் தான் நமக்கு ஞாபகம் வருகிறது. பிரேமம் படத்திற்கு பிறகு கதைகள் தேர்ந்தெடுப்பதில் கொஞ்சம் சறுக்கினாலும், பிறகு சுதாரித்துக் கொண்டு அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து சாய் பல்லவி நடித்து வருகிறார். அதிக அளவில் படங்களை நடிக்காமல் இருப்பதே இவருடைய பெரிய பிளஸ் ஆக இருக்கிறது.

தமன்னா: மில்க் பியூட்டி நடிகை தமன்னாவுக்கு கிட்டத்தட்ட 35 வயது நெருங்கி விட்டது. தமிழில் அஜித்குமார், விஜய், தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த தமன்னா சில காலங்கள் மார்க்கெட் இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். மீண்டும் விட்ட மார்க்கெட்டை பிடிப்பதற்காக கவர்ச்சியை கையில் எடுத்த தமன்னாவுக்கு அது மிகப் பெரிய அளவில் கை கொடுத்தது. இப்போது மீண்டும் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார்.

Also Read:நான் நடிக்கலானாலும் எந்த கஷ்டமும் இல்லை.. சம்பாதித்த பணத்தில் சமந்தா நடத்தி வரும் தொழில்கள்

 

 

Trending News