வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

ஆணழகனாக இளசுகளின் மனதை கொள்ளையடிக்கும் 5 சீரியல் ஆர்டிஸ்ட்கள்.. இந்த விஷயத்தில் கோட்டை விட்ட சன் டிவி

5 Serial Artist Handsomeness: என்னதான் முன்னணி நடிகர்களின் படங்கள் ஆர்ப்பாட்டமாக வெளிவந்தாலும் தினமும் வீட்டில் இருந்தபடியே குடும்பத்தை கவரக்கூடிய ஒரு அஸ்திவாரம் தான் சீரியல்கள். இதை தினமும் வீட்டில் இருந்தபடியே குடும்பத்துடன் அனைவரும் பார்த்து அவர்களுடைய பொழுதுபோக்கை கழித்து வருவார்கள். அந்த வகையில் போட்டி போட்டு பல சேனல்கள் நாடகத்தை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.

பொதுவாக டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்வது சன் டிவி தான். ஆனால் இந்த ஒரு விஷயத்தில் சன் டிவியை ஓவர் டேக் பண்ணி விட்டது மற்ற சேனல்கள். அப்படி வருகின்ற நாடகங்களில் சீரியல் மூலமாக ரொமாண்டிக் ஹீரோவாக இளசுகளின் மனதை சில ஆர்டிஸ்ட்டுகள் கொள்ளையடித்திருக்கிறார்கள். அவர்கள் யார் என்றும் எந்த நாடகத்தில் நடிக்கிறார்கள் என்பதை பற்றியும் தற்போது பார்க்கலாம்.

விஜய் மற்றும் முத்து: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில் காவிரியின் கணவராக நடித்து வரும் விஜய். இவர் ஏற்கனவே காற்றுக்கென்ன வேலி என்ற நாடகத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது இவருடைய நடிப்பும், பார்வையும் அனைவரையும் கவர்ந்து விட்டது. இவருக்கு அடுத்தபடியாக சிறகடிக்கும் ஆசை சீரியலில் முத்துவின் எதார்த்தமான கேரக்டர் அனைவரையும் ஈர்த்து ஆணழகனாக மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.

Also read: டாம் அண்ட் ஜெரியாக இருந்த ராஜிவை திருமணம் செய்த கதிர்.. பாக்யா தலைமை நடந்த ரகசிய கல்யாணம்

அன்பு: தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிங்க பெண்ணே சீரியல் தான் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. அதற்கு காரணம் எதார்த்தமான கதையாக இருந்தாலும் அன்புவின் நடிப்பும், அழகும் அனைவரையும் கவர்ந்து விட்டது. அத்துடன் இளசுகளின் மனதை கொள்ளையடித்து விட்டார்.

கார்த்திக் மற்றும் ஆதி: ஜீ தமிழில் செம்பருத்தி நாடகத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது மனதையும் கவர்ந்து விட்டார். அத்துடன் ஹீரோவுக்கான லுக் அனைத்தும் இவரிடம் இருக்கிறது என்று எல்லோரும் தூக்கிக் கொண்டாட ஆரம்பித்தார்கள். இதனைத் தொடர்ந்து தற்போது கார்த்திகை தீபம் என்ற நாடகத்தின் மூலம் மறுபடியும் ஆணழகனாக ஜொலிக்கிறார்.

அடுத்து இதயம் சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆதி. இவருடைய கண்ணுக்கும் ரொமான்ஸுக்கும் ரசிகர்கள் அடிமையாகி விட்டார்கள். அந்த அளவிற்கு எல்லோரும் மனதிலும் இவருக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

Also read: சமுத்திரக்கனி படநாயகியை கரம் பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகர்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

Trending News