வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வெள்ளி விழா கண்ட கமலின் 6 படங்கள்.. தேசிய விருதைப் பெற்றுத்தந்த மூன்றாம் பிறை

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களின் படங்கள் வெற்றி பெறுவதுடன் அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடி மாபெரும் சரித்திரத்தையே படைக்கும். அப்படியாக சினிமாவில் நடிப்பில் அரக்கனாக விளங்க கூடியவர் தான் உலக நாயகன் கமலஹாசன். அதிலும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் மிகக் கச்சிதமாக நடித்து நடிப்பு அரக்கனாகவே வலம் வரக்கூடியவர். இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து வெள்ளி விழா கண்ட 6 படங்களை இங்கு காணலாம்.

16 வயதினிலே: பாரதிராஜா இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 16 வயதினிலே. இதில் ரஜினிகாந்த், கமலஹாசன், ஸ்ரீதேவி காந்திமதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் கமலஹாசன் சப்பாணி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதிலும் தமிழ் திரைப்பட வரலாற்றில் திருமனையை ஏற்படுத்திய படமாகவும் அமைந்தது.  இப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அத்துடன் 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது. 

Also Read: கமல் எழுதி மாஸ் ஹிட் அடித்த 5 பாடல்கள்.. வைரமுத்து, வாலிக்கு டஃப் கொடுத்து பட்டையை கிளப்பிய வரிகள்

மீண்டும் கோகிலா: ஜி என் ரங்கராஜன் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மீண்டும் கோகிலா. இதில் கமலஹாசன் உடன் ஸ்ரீதேவி ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். மேலும் இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் கமல் குடும்பத் தலைவனாக சுப்ரமணியன் என்னும் கதாபாத்திரத்தில் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி இருப்பார். அதிலும் இப்படம் 184 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வெற்றி விழா கொண்டாடியது. 

சிகப்பு ரோஜாக்கள்: பாரதிராஜா இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சிகப்பு ரோஜாக்கள். இப்படத்தில் கமல் உடன் ஸ்ரீதேவி ஜோடி சேர்ந்து நடித்திருப்பார். மேலும் கமலஹாசன், திலீப் என்னும் கதாபாத்திரத்தில் பெண்கள் மேல் வெறுப்பு உணர்வை காட்டக்கூடிய மனநோயாளி போன்ற தோற்றத்தில் நடித்திருப்பார். அதிலும் 175 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடி வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.

Also Read: கமலின் எக்ஸ் மனைவி மகளை பார்த்தீர்களா? புகைப்படத்தில் அம்மா யாரு பொண்ணு யாருன்னு தெரியல!

சகலகலா வல்லவன்: எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சகலகலா வல்லவன். இதில் கமல்ஹாசன் உடன் அம்பிகா, ரவீந்திரன்,      வி கே ராமசாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் கமலஹாசன் கிராமத்து இளைஞர் ஆக வேலு என்னும் கதாபாத்திரத்தில் நடித்து அசதி இருப்பார். மேலும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். படத்தில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் 175 நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.

நாயகன்: மணிரத்தினம் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நாயகன். இதில் கமல்ஹாசன் உடன் சரண்யா, ஜனகராஜ், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படம் மும்பை தாதாவாக விளங்கிய வரதராஜன் முதலியாரின் வாழ்க்கை மையமாகக் கொண்டு வெளிவந்த திரைப்படம் ஆகும். அதிலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றதுடன் மூன்று முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளது. அத்துடன் 175 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடியது.

மூன்றாம் பிறை: பாலு மகேந்திரா இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மூன்றாம் பிறை. மேலும் இப்படத்தில் ஞாபக மறதியை எதிர்கொள்ளும் ஸ்ரீதேவியுடன், கமலஹாசனுக்கு ஏற்படும் ஒரு அழகான காதல் கதையை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படம் ஆகும். தனது சிறப்பான நடிப்பை  வெளிப்படுத்தியதற்காக கமலஹாசனுக்கு இப்படம் தேசிய விருதை பெற்ற தந்தது. மேலும் திரையரங்குகளில் 330 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது.

Also Read: கமல் ஹீரோயிசம் காட்டாத 6 படங்கள் .. உண்மையிலே இவர் பைத்தியமா என யோசிக்க வைத்த மூன்று படங்கள்

Trending News