புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தயாரிப்பாளரை தலையில் துண்டு போட வைத்த சங்கர்.. பல கோடி செலவில் எடுக்கப்பட்ட 5 பாடல்கள்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான கதைகளை படங்களாக இயக்குவதில் வல்லவராக திகழ்ந்து வருபவர் தான் இயக்குனர் சங்கர். இப்படியாக இவர் இயக்கிய படங்களில் ஒரு பாடல்களுக்காக மட்டுமே ரொம்பவும் மெனக்கெட்டு இருக்கிறார். அதுவும் தயாரிப்பாளர்கள் தலையில் துண்டை போடும் அளவிற்கு தனது பிரம்மாண்டத்தை காட்டியுள்ளார். இப்படியாக இவரின் படங்களில் வரும் ஒரு  பாடலுக்கு மட்டும் கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளார். அவை என்னென்ன படங்கள் என்பதை இங்கு காணலாம்.

ஜீன்ஸ்: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜீன்ஸ். இதில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்திய படங்களில் ஒன்றாக அமைந்தது. அதிலும் இப்படத்தில் வரும் “பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்” என்னும் பாடலில் உலகில் உள்ள ஏழு அதிசயங்களையும் காட்டி மக்களை வியக்க வைத்திருப்பார் சங்கர். இந்த ஒரு பாடலுக்காக மட்டும் 4 கோடிகள் வரை செலவு செய்துள்ளனர்.

Also Read: சங்கர் இவ்வளவு பெரிய தில்லாலங்கடியா? இப்படியெல்லாம் பண்ணா எந்த தயாரிப்பாளர் தான் சும்மா இருப்பாங்க!

இந்தியன்: 1996 ஆம் ஆண்டு கமலஹாசன், மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் இந்தியன். இதில் கமலஹாசன் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தில் வரும் “மாயா மச்சந்திரா” என்னும் பாடலுக்காக மட்டும் 7 கோடி வரை செலவு செய்துள்ளனர்.

முதல்வன்: 1999 ஆம் ஆண்டு அர்ஜுன், மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் முதல்வன். இதில் சமூகத்திற்கு பயனுள்ள கருத்துக்களை மையமாக வைத்து வெளிவந்த சூப்பர் ஹிட்  திரைப்படம் ஆகும். அதிலும் இப்படத்தில் வரும் “முதல்வனே” என்னும் பாடலுக்காக மட்டும் 4 கோடி வரை செலவு செய்துள்ளனர்.

Also Read: நம்பி நடிச்சதுக்கு வச்சு செய்த சங்கர்.. அங்கவை சங்கவை அப்பாவிற்கு நடந்த ஏமாற்றம்

காதலன்: 1994 ஆம் ஆண்டு பிரபுதேவா, நக்மா நடிப்பில் வெளிவந்த  திரைப்படம் காதலன். இதில் பிரபுதேவா தனது ஒரு தலை காதலை பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, தனது காதலியிடம் நிரூபிப்பதை மிக அழகாக காட்டியுள்ளனர். அதிலும் இப்படத்தில் வரும் “முக்காலா முக்காப்புலா” என்னும் பாடலுக்காக மட்டும் 3 கோடி வரை செலவு செய்துள்ளனர்.

அந்நியன்: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் விக்ரம், பிரகாஷ்ராஜ், சதா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அந்நியன். இப்படம் பன்மனோபாவ ஒழுக்கமின்மை நோயின் மையமாகக் கொண்டு அமைந்த திரைப்படம் ஆகும். அதிலும் பல கோடி செலவில் இந்தப் படமானது எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வரும் “அண்டங்காக்கா கொண்டக்காரி” என்னும் ஒரு பாடலுக்காக மட்டும் 5 வரை செலவு செய்துள்ளனர்.

Also Read: 10 கோடியை வீணாக்கிய ஷங்கர்.. அம்பலமான மருமகனின் போக்சோ வழக்கு

Trending News