வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

யூடியூபில் அதிக வியூஸ் பெற்ற 5 பாடல்கள்.. யாராலும் முறியடிக்க முடியாத சாதனையில் தனுஷ்

ஒரு படம் வெளிவருவதற்கு முன்பே படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்படுகிறது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் தூண்டி விடுகிறது. அந்த வகையில் படம் வெற்றி பெறுகிறதோ, இல்லையோ பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து விடுகிறது.

அதிலும் சோசியல் மீடியாவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் முன்னணி நடிகர்களின் பட பாடல்கள் பயங்கர ட்ரண்ட் ஆகிறது. அந்த வகையில் யூட்யூபில் அதிக பார்வையாளர்களை கடந்த ஐந்து பாடல்களை பற்றி இங்கு காண்போம்.

Also read:தனுசுக்கு நோ மணிரத்தினத்துக்கு ஓகே.. ஓரவஞ்சனை செய்த உலக அழகி

குலேபகாவலி – குலேபா கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் குலேபகாவலி. இப்படத்தில் இடம் பெற்றிருந்த குலேபா என்ற பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் குத்தாட்டம் போட வைத்தது. அந்த வகையில் இந்த பாடல் யூட்யூபில் 209 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.

நம்ம வீட்டு பிள்ளை – காந்த கண்ணழகி இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்த இந்த திரைப்படம் ஃபேமிலி ஆடியன்ஸை மிகவும் கவர்ந்தது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்திருந்தாலும் காந்த கண்ணழகி என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. பலரும் ரசித்த இந்த பாடல் யூடியூபில் 215 மில்லியன் பார்வையாளர்களை கடந்து நான்காம் இடத்தை பிடித்துள்ளது.

Also read:இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போன 5 ஹீரோக்கள்.. ஒரு வெற்றி கிடைக்காதா என போராடும் ஜீவா

மாஸ்டர் – வாத்தி கம்மிங் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் என்ற பாடல் சோசியல் மீடியாவையே கலக்கியது. அந்த வகையில் இப்பாடல் 356 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

பீஸ்ட் – அரபிக் குத்து நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் போன்றோர் நடித்திருந்த இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து என்ற பாடல் பட்டி தொட்டி வரை பிரபலமானது. படம் வெளிவருவதற்கு முன்பே வைரலான இந்த பாடல் யூடியூபில் 386 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

மாரி 2 – ரவுடி பேபி கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தனுஷ் மற்றும் சாய் பல்லவியின் கலக்கலான நடனத்தில் வெளிவந்த இந்த பாடல் பல சாதனைகளை புரிந்தது. இப்போது வரை இந்த பாடலின் சாதனையை வேறு எந்த பாடலும் முறியடிக்கவில்லை. அந்த வகையில் இந்த பாடல் யூடியூபில் 1.3 பில்லியன் பார்வையாளர்களை கடந்து முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.

Also read:பாக்ஸ் ஆபிஸை கலக்கும் 5 படங்கள்.. தரமான சம்பவம் செய்த திருச்சிற்றம்பலம்

Trending News