செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

5 நட்சத்திர வீரர்களின் ஐபிஎல் சம்பளம்.. திலக் வர்மா, ரிங்கு சிங் வாங்கிய தொகைகள்

ஐபிஎல் போட்டிகள் வந்து விட்டாலே வீரர்கள் குஷி மூடுக்கு வந்து விடுவார்கள். திறமையுள்ள எல்லோருக்கும், திறமையை நிரூபிக்க துடிக்கும் அனைவருக்கும் நிச்சயமாக இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கும். திறமையின் அடிப்படையில் இந்திய அணிக்கும் விளையாட தேர்வு செய்யப்படுவார்கள். அப்படி ஐபிஎல் விளையாடிய 5 நட்சத்திர வீரர்கள் சம்பளம் விவரம்

சிவம் டுபே: சென்னையின் நம்பிக்கை நட்சத்திரம் இந்த சீசனில் இவர்தான். இவர் அதிரடி ஆட்டம் விளையாடினால் சென்னை அணி எளிதாக வெற்றி பெற்று விடும் அந்த அளவுக்கு விளையாடி வந்த சிவம் துபேவின் சம்பளம் 4 கோடிகள்.

அபிஷேக் சர்மா: இந்த ஐபிஎல் தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரைட்டில் 484 ரன்கள் அடித்த வீரர் இவர்தான். சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வந்த இவரின் சம்பளம் 6.50 கோடிகள். நன்றாக விளையாடிய போதிலும் இவரை இந்திய அணி T20 ஓவர் உலக கோப்பையில் தேர்வு செய்யவில்லை.

திலக் வர்மா, ரிங்கு சிங் வாங்கிய தொகைகள்

ரிங்கு சிங்: கே கே ஆர் அணி ரிங்கு சிங்குக்கு கொடுக்கும் சம்பளம் வெறும் 55 லட்சம் தான்.இந்த தொகை மிகவும் குறைவு என்ற பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், திறமையில் வெற்றி பெற வேண்டும் சம்பளத்தில் இல்லை என ரிங்கு சிங் பதிலடி கொடுத்தார்.

திலக் வர்மா: பல திறமைகள் இருந்தும் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. எப்பொழுதுமே இவரை குறைத்து மதிப்பிடுவார்கள். ஆனால் இவர் நன்றாக ஆடக்கூடிய வீரர். மும்பை அணிக்காக விளையாடி வரும் இவரின் சம்பளம் 1.70 கோடிகள்.

தினேஷ் கார்த்திக்: பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் மீண்டும் எழுந்து வந்து தன் திறமையை காட்டுவார். கிட்டத்தட்ட 40 வயதாகியும் இன்னும் ஐபிஎல்லில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். ஆர் சி பி அணியின் மேட்ச் வின்னர் தினேஷ் கார்த்திக் தான். இவரின் சம்பளம் 5.5 கோடிகள்.

Trending News