ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

40 வருடங்களாக ஹீரோவாக நடிக்கும் 5 நடிகர்கள்.. கெத்து குறையாமல் வசூல் வேட்டையாடும் சூப்பர் ஸ்டார்

Tamil Heroes: சினிமாவில் பொதுவாக 10லிருந்து 15 வருடங்கள் நடிப்பதே பெரிய விஷயமாக இருக்கும். அதிலும் சில நடிகர்கள் 30 முதல் 40 வருஷங்களாக நடித்துக் கொண்டே இருக்கிறார்கள். இன்னமும் அவர்களுக்கு மவுஸ் குறையாமல் எக்கச்சக்க பட வாய்ப்புகளும் தேடி வருகின்றன. அப்படி 40 வருஷத்துக்கு மேலே ஜெக ஜோதியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்கள் யார் என பார்க்கலாம்.

கமல்ஹாசன்: உலக நாயகன் கமல்ஹாசனின் சாதனைகளுக்கு ஈடு இணையே கிடையாது. 1959ல் குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கி, 1970களில் முன்னிலை நட்சத்திரமாக ஜொலித்தார். இவரின் தனித்துவமான நடிப்பினால் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் நடித்து, தற்போது வரை பீக்கில் இருக்கும் நடிகர்களுக்கு பயங்கர சவாலாக இருக்கிறார். 63 வருடங்களாக ஹீரோவாக திரையுலகை தெறித்து விட்டுக் கொண்டிருக்கிறார்.

Also Read:வெறித்தனமாக வசூல் வேட்டையாடும் மார்க் ஆண்டனி.. 2 வார வசூல் இத்தனை கோடியா?

ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கே உரிய ஸ்டைலினால் ரசிகர்கள் அனைவரையும் 1970களில் கவர ஆரம்பித்து விட்டார். 1975இல் அபூர் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, படிப்படியாக முன்னேறி சூப்பர் ஸ்டார் ஆக தற்போது ஆதிக்கம் செய்து கொண்டிருக்கிறார். 48 வருடங்களாக திரை உலகில் சாதனை படைத்து கொண்டு இருக்கிறார். இவரின் நடிப்பில் வெளியான திரைப்படங்களின் வெற்றி எண்ணில் அடங்காதவை. சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்திலும் 600 கோடி வரை வசூலை குவித்து, நம்பர் 1 லீடிங் ஹீரோவாக கெத்தோடு இருக்கிறார்.

சத்யராஜ்: கட்டப்பாவாக தற்போது இருக்கும் இளசுகளின் இடையே நன்கு பரீட்சியமானவர் சத்யராஜ். இவர் காமெடியாகவும், வில்லனாகவும், கதாநாயகனாகவும், துணை நடிகராகவும் சுமார் 45 ஆண்டுகளாக சினிமாவில் நடித்துக் கொண்டு வருகிறார். முன்னணி நடிகர்களுக்கு ஒரு போட்டியாக இருந்தவர், 70களில் ஆரம்பித்த பயணம் தற்போது வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

Also Read:நடிப்பை தாண்டி ஷாருக்கான் கல்லா கட்டும் 5 தொழில்கள்.. கோடிக்கணக்கில் கொட்டும் பணமழை

பிரபு: சிவாஜி கணேசனின் மகன் சின்னத்தம்பி பிரபுவும் இதில் ஒருவர். 1982 சங்கிலி திரைப்படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 220 படங்களுக்கு மேலே நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் துணை நடிகராகவும் நடித்துள்ளார். ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்கள் உடனும் இணைந்து நடித்துள்ளார். 41 ஆண்டுகளாக சினிமாவில் அசத்தலாக நடித்து வருகிறார்.

விஜயகுமார்: 1961இல் ஸ்ரீவள்ளி என்னும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் விஜயகுமார். அதன்பிறகு 1974 கதாநாயகனாக அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, 47 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். நாட்டாமை, கிழக்குச் சீமையிலே, இன்று போல் என்றும் வாழ்க என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சிவாஜிகணேசன், எம்ஜிஆர் போன்றோருடன் இணைந்து நடித்துள்ளார்.

Also Read:இரவு பார்ட்டியில் உச்சகட்ட போதையில் தடுமாறிய நடிகை.. குடித்து கும்மாளம் போடும் சூப்பர் ஸ்டாரின் தங்கச்சி

Trending News