செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தமிழ் படங்களை ஒதுக்கி அக்கட தேசத்திற்கு பறந்த 5 இயக்குனர்கள்.. பாலிவுட் வரை பட்டையை கிளப்பும் அட்லி

லோகேஷ் கனகராஜ், நெல்சன், வினோத் போன்ற இளம் இயக்குனர்கள் பெரிய நடிகர்களின் படங்களை இயக்கி வருகிறார்கள். இதனால் பழைய இயக்குனர்களுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு குறைய தொடங்கியுள்ளது. இதனால் அக்கடா தேசத்திற்கு படையெடுத்த 5 இயக்குனர்களை தற்போது பார்க்கலாம்.

ஏஆர் முருகதாஸ் : தமிழில் முருகதாஸ் இயக்கிய படங்கள் மற்ற படங்களின் கதையை திருடி எடுப்பதாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் தற்போது தமிழ் சினிமாவே வேண்டாம் என்று பாலிவுட் பக்கம் சென்று உள்ளார். ஷாருக்கான், சல்மான் கானை வைத்து முருகதாஸ் புதிய படம் ஒன்றை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷங்கர் : கமலஹாசனின் இந்தியன் 2 படத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஷங்கருக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் பெரிய நடிகர்களின் கால்ஷீட் ஷங்கருக்கு கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கில் ராம்சரணை வைத்த ஷங்கர் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

லிங்குசாமி : லிங்குசாமி இயக்கத்தில் வெளியான படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்த நிலையில் சில காலம் படங்களை இயக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். அதன் பிறகு தெலுங்கில் தி வாரியர் என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்படமும் தோல்வியை சந்தித்துள்ளது.

அட்லி : தளபதி விஜய்க்கு தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் அட்லி. இவரது படங்கள் ஹிட் ஆனாலும் மற்ற படங்களை பார்த்து காப்பி அடிக்கிறார் என்ற விமர்சனம் தொடர்ந்து வருகிறது. இதனால் தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ள அட்லி ஷாருக்கானை ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.

மோகன் ராஜா : ஜெயம்ரவி, மோகன்ராஜா கூட்டணியில் வெளியான படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட். தற்போது தமிழ் சினிமாவை காட்டிலும் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ரீமேக் கிங்கான மோகன் ராஜா தற்போது லூசிபர் படத்தின் ரீமேக்கை சிரஞ்சீவியை வைத்து எடுத்து வருகிறார்.

Trending News