திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

வரலாற்று கதையில் வசூலை குவித்த 5 படங்கள்.. 2ம் பாகத்தை எடுக்க துடித்துக்கொண்டிருக்கும் செல்வராகவன்

சிலர் வரலாற்றை புத்தகம் மூலமாக படித்துத் தெரிந்து கொள்கின்றனர். ஆனால் புத்தகம் படிக்கும் பழக்கமில்லாத பலருக்கு வரலாற்றில் தெரிந்து கொள்ளும் ஆசை இருப்பதால் அதை படங்களின் மூலமாக எளிதாக தெரிந்து கொள்வதால் அப்படிப்பட்ட படங்களுக்கு ரசிகர்களின் மத்தியில் தனி மவுசு

மதராசபட்டணம்: இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் இருந்த காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்திருக்கும். சுவாரசியமான காதல் மற்றும் தேச பக்தி கொண்ட திரைக்கதையில் உருவாக்கியிருந்த இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 2010 ஆம் ஆண்டு தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளிவந்த இந்த படத்தை ஏஎல் விஜய் இயக்கி ஆர்யா, எமி ஜாக்சன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.

ஹே ராம்: 2000 ஆண்டுகளில் ஹிந்தி, தமிழ் என  இரண்டு மொழிகளில் வெளிவந்த இந்தப் படத்தை கமலஹாசன் திரைக்கதை எழுதி இயக்கி இருப்பார். இந்த படம் இந்தியா சார்பில் அந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருது பெறுவதற்கான போட்டிக்கு அனுப்பப்பட்ட மிகச் சிறப்பு வாய்ந்த படம். இதில் கமலஹாசனுடன் ஷாரூக்கான், ராணி முகர்ஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள். ஆங்கிலேயர்களின் காலத்தில் நடைபெற்ற ஆராய்ச்சி மற்றும் அதே காலகட்டத்தில் நிலவிய இந்து-முஸ்லிம் பிரிவினைகளை தோலுரித்துக் காட்டிய திரைப்படம்.

அரவான்: 2012 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தின் திரைக்கதை, சு. வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டத்தில் என்ற சாகித்ய அகாடமி விருது பெற்ற புதினத்தின் ஒரு துணை கதை. வசந்தபாலன் இந்தப் படத்தை இயக்கி இருப்பார். ஆதி, பசுபதி, தன்ஷிகா, பரத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இந்தப்படத்தில் களவு செய்வதையும், களவு செய்பவர்களிடம் இருந்து தங்களது கிராமங்களை எப்படித் தற்காத்துக் கொண்டார்கள் என்பதையும் இந்தப்படத்தில் விளக்கிக் கூறியிருப்பார்கள்.

ஆயிரத்தில் ஒருவன்: 1279 ஆண்டு காலகட்டத்தில் ஆட்சியின் இறுதி அத்தியாயத்தையும், பாண்டியர் சோழர்களோடு போரிட்டு பாண்டியரின் குலதெய்வ சிலையையும் மீட்பதற்காக, பல தடைகளை மீறி ஆபத்தான தீவிற்கு சென்ற இளம் தலைமுறையில் இருந்து உதித்த சோழ, பாண்டிய வம்சாவளிகளை வைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருப்பார்கள். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் 2ம் பாகத்தை இயக்குனர் செல்வராகவன் எடுப்பதில் முனைப்பு காட்டிக் கொண்டிருக்கிறார். கூடிய விரைவில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்குவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.

பொன்னர் சங்கர்: கலைஞர் மு. கருணாநிதி திரைக்கதை எழுத, தியாகராஜன் இயக்கிய இந்தப் படத்தில் பிரசாந்த் இரு வேடத்தில் நடித்திருப்பார். படத்தின் கதை அண்ணமார் சாமி கதை என்ற கொங்கு வட்டாரத்தில் சொல்லப்படுகிற பொன்னர் சங்கர் எனும் இருவரின் வரலாற்றுக் கதையை வைத்தே உருவாக்கி இருப்பார்கள். இதில் முன்பகை காரணமாக குறுநில மன்னர்கள் பொன்னர், சங்கர் மீது போர் தொடுப்பதும், இறுதியில் பொன்னரும் சங்கரும் வெற்றி பெறுவது தான் இந்த படத்தின் கதை.

இவ்வாறு தமிழ் சினிமாவிற்கு வித்தியாச வித்தியாசமான கதைக் களங்களை கொண்ட படங்கள் வெளிவந்தாலும், வரலாற்றுக் கதைகளை வைத்து படமாக்கிய திரைப்படங்களை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்ப்பதுண்டு. குறிப்பாக இந்த 5 படங்களும் வசூல் ரீதியாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இன்று வரை ரசிகர்களின் பிடித்தமான படங்களை லிஸ்டில் இடம் பெற்றிருக்கிறது.

Trending News