ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அஜித்துடன் த்ரிஷா ஜோடி சேர்ந்த 5 படங்கள்.. விஜய்க்குப்பின் ஒர்க் அவுட்டான செம கெமிஸ்ட்ரி

நடிகை திரிஷா, தளபதி விஜய்க்கு ஒரு அதிர்ஷ்ட நாயகி என்று அவரே பல மேடைகளில் சொல்லி இருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் அத்தனையுமே வெற்றி பெற்றிருக்கின்றன. மேலும் விஜய்யும், த்ரிஷாவும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் கிசுகிசுக்கப்பட்டதும் உண்டு. தற்போது இருவரும் லியோ படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். விஜய்க்குப் பின் த்ரிஷாவின் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன ஹீரோ என்றால் அது அஜித் குமார் தான். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் எல்லாம் ஹிட் அடித்து இருக்கின்றன.

மங்காத்தா: இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் குமாருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் மங்காத்தா. இந்த படத்தில் திரிஷா சில காட்சிகளில் மட்டுமே வந்திருந்தாலும் இவருடைய கேரக்டர் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்தது. மேலும் அஜித் மற்றும் திரிஷா இடையேயான காதல் நெகட்டிவ் ஷேட் கொண்டதாகவும் இருந்தது.

Also Read:ஜெயிலர் படத்தால் எகிறிய சம்பளம்.. விஜய்க்கு டஃப் கொடுக்க போகும் சூப்பர் ஸ்டார்

கிரீடம்: இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் அஜித் மற்றும் த்ரிஷா இணைந்து நடித்த திரைப்படம் கிரீடம். இந்த படம் அதிரடி ஆக்சன் திரைப்படமாக இருந்தாலும் இவர்கள் இருவருக்கிடையேயான காதல் கெமிஸ்ட்ரியும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. இந்த படத்தில் வரும் காதல் காட்சிகள் இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.

என்னை அறிந்தால் : எப்போதுமே இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் படங்கள் என்றாலே அதில் ஹீரோயின்கள் கொள்ளை அழகில் ஜொலிப்பார்கள். அந்த வகையில் அவர் இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா என்னை அறிந்தால் திரைப்படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்தனர். இதில் ஹேமானிக்கா என்னும் பரதநாட்டிய கலைஞராக த்ரிஷா நடித்திருப்பார்.

Also Read:வேறு எந்த படத்திலும் விஜய் செய்யாத விஷயம்.. லோகேஷையே மிரளவிட்ட தளபதி

ஜி: இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா இணைந்து நடித்த திரைப்படம் ஜி. இந்த படத்தில் திரிஷா பள்ளி மாணவியாகவும், அஜித் குமார் கல்லூரி மாணவனாகவும் நடித்திருப்பார். வித்யாசாகர் இசையில் இந்த படத்தின் காதல் பாடல்கள் அத்தனையுமே ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

விடாமுயற்சி: இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் விடாமுயற்சி என்னும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இது அவருடைய 62 ஆவது படமாகும். லியோ படத்தை தொடர்ந்து த்ரிஷா அஜித்துடன் இந்த விடாமுயற்சி திரைப்படத்தில் ஜோடி சேர இருக்கிறார். மேலும் இந்த படத்தில் அஜித்திற்கு டூயல் ரோல் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. இதனால் திரிஷாவுடன் வேறொரு கதாநாயகியும் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

Also Read:அஜித் விஜய்க்கு அடுத்த வரிசையில் இருக்கும் ஐந்து ஹீரோக்கள்.. தொடர் தோல்வியால் வாய்ப்பு இழந்த விக்ரம்

Trending News