வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

படத்துக்காகவே கமல் கத்துக்கிட்ட 5 விஷயங்கள்.. சொல்லிக் கொடுத்த நடிகையவே ஹீரோயின் ஆக்கிய உலகநாயகன்

5 Things Kamal Learned: கமல் தனது 69வது பிறந்த நாளை இன்று கோலாகலமாக கொண்டாடி வருகிறார். இவருக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை குவித்து கொண்டிருக்கின்றனர். இன்றைய நாளில் சோசியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் கமலுடைய பேச்சு தான். அதிலும் இவர் நடித்த ஐந்து படத்திற்காகவே மெனக்கெட்டு ஐந்து விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறார்.

அலாவுதீனும் அற்புத விளக்கும்: ஆயிரத்தொரு இரவுகளில் இருந்து அலாவுதீன் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் கமலஹாசன், ரஜினி ,ஜெயபாரதி, ஸ்ரீப்ரியா, ஜெமினி கணேசன், சாவித்திரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். தமிழ், மலையாளம் மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றது.

இந்த படத்தில் கமலஹாசன் சண்டை காட்சிகளில் வால் சண்டையும் குதிரை சவாரியும் செய்ய வேண்டியதாக இருந்தது. இதற்காகவே இவர் வால் சண்டை பயிற்சியையும், குதிரை சவாரியும் செய்வதற்கு கடும் பயிற்சி மேற்கொண்டு கற்றுக்கொண்டார்.

சதிலீலாவதி: கமலஹாசன் உடன் கோவை சரளா ஜோடி போட்டு சூப்பர் ஹிட் அடித்த படம் தான் சதிலீலாவதி. இந்த படத்தில் பழனி சக்திவேல் கவுண்டர் என்ற கேரக்டரில் கோவை சரளா கொங்கு தமிழில் சரளமாக பேசி அசர வைத்தார். ஆனால் முதலில் இந்த படத்தில் கோவை சரளாவை கதாநாயகியாக தேர்வு செய்யவில்லை. அவர் கமலுக்காக கொங்கு தமிழை ட்ரெயின் கொடுப்பதற்காக வந்தவர்.

ஆனால் அவருடைய சரளமாக பேச்சை பார்த்து அசந்த கமல், கோவை சரளாவையே இந்த படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க வேண்டும் என படத்தில் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் பரிந்துரைத்தார். அது மட்டுமல்ல இந்த படத்திற்காகவே கமல் கொங்கு தமிழை சரணமாகப் பேச பயிற்சி எடுத்துக் கொண்டார்.

Also read: கமல் இதை விடவே மாட்டாரா.? சர்ச்சையை தூண்டிவிடும் Thug Life

தெனாலி: கமலஹாசன் உடன் ஜோதிகா, தேவயானி, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த படம் தான் தெனாலி. முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாக இந்த படத்தில் தெனாலி சோமன் என்ற கேரக்டரில் கமலஹாசன் இலங்கைத் தமிழர் போல் நடித்தார். இந்த கேரக்டருக்காகவே இவர் சிங்கள தமிழை சரணமாகப் பேச கற்றுக் கொண்டார்.

எனக்குள் ஒருவன்: எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் கமலஹாசன், சோபனா, சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த படம் தான் எனக்குள் ஒருவன். படத்திற்காகவே கமல் கராத்தே கற்றுக் கொண்டார். இந்த படத்தின் காட்சிகளில் கராத்தே அவசியம் தெரிந்திருக்க வேண்டியதாக இருந்தது. உடனே கமல் அதை முழு மூச்சில் கற்றுக்கொண்டு படத்தில் மிரட்டி விட்டார்.

விஸ்வரூபம்: உலகநாயகன் கமலஹாசன் தயாரித்து இயக்கி நடித்த சூப்பர் ஹிட் படம் தான் விஸ்வரூபம். இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியானது. இந்தப் படத்திற்காகவே கமலஹாசன் 60 வயதை கடந்த நிலையிலும் கதக் டான்ஸ் கற்றுக் கொண்டார். படத்தில் இடம்பெற்ற ‘உன்னைக் காணாது நான்’ பாடலில் உலக நாயகன் அசர வைக்கும் அளவுக்கு கதர் டான்ஸ் ஆடி மெய் சிலிர்க்க வைத்தார்.

Also read: காயல்பட்டினகாரனுக்கு பின்னாடி இவ்வளவு கதைகளா!. கமலின் ‘தக் லைஃப்’ டைட்டிலுக்கு இப்படி ஒரு காரணமா?

Trending News