ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

இளம் ஹீரோக்களுடன் போட்டி போட்டு நடித்த சிவாஜியின் 5 படங்கள்.. 31 வருடத்திற்கு பின்னும் நின்னு பேசும் படம்

Sivaji Ganesan: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பின் அகராதி என்றே சொல்லலாம். 60ளின் காலகட்டத்தில் எப்படி தன்னுடைய சிறந்த நடிப்பால் சக நடிகர்களை தூக்கி சாப்பிட்டாரோ அதேபோல் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸிலும் பல இளம் ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும், காட்சிகளில் அவர்களை மறந்து இவரை மட்டுமே பார்க்கும் அளவிற்கு வசனங்களாலும், முகபாவனைகளாலும் கவர்ந்திழுத்திருந்தார். அப்படி சிவாஜி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் நடித்த சிறந்த ஐந்து படங்கள் இவைதான்.

முதல் மரியாதை: ஒரு 40 வயதை கடந்த ஆணுக்கு, 20 வயது பெண்ணுடன் இனம் புரியாத நேசம் உருவாகிறது என்றால், அந்த படத்தில் சிவாஜியைத் தவிர வேறு யாரு நடித்திருந்தாலும் கண்டிப்பாக ரசிகர்கள் முகம் சுழித்திருப்பார்கள். அந்தப் பெண்ணை பிடித்திருந்தாலும் அவளுடைய நலனுக்காக அன்பை மறைப்பது, ஒரு கட்டத்தில் வடிவுக்கரசியின் மீது ஆக்ரோஷமான கோபத்தை காட்டி விட்டு, அதே நேரத்தில் தன் காலில் வந்து விழும் தன்னுடைய மகளின் மீது அன்பை பொழிவது என சிவாஜி அந்த கேரக்டரில் வாழ்ந்து இருப்பார்.

Also Read:750 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றியை பார்த்த சிவாஜி.. 3-வது முறையாக போட்டிக்கு வரும் ரீ ரிலீஸ் படம்

படையப்பா : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போன்ற ஸ்டைலான மகனுக்கு அப்பா கேரக்டர் என்றால் அது கண்டிப்பாக சிவாஜிக்கு தான் கரெக்டாக இருந்தது. சொத்தை எல்லாம் தன் தம்பிக்கு எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறும் காட்சியாக இருக்கட்டும், கடைசியாக நான் வாழ்ந்த வீட்டில் உட்கார்ந்து விட்டு வருகிறேன் என்று குழந்தை போல் ஓடி சென்று அந்த தூணை கட்டிக்கொண்டு அழுவதாக இருக்கட்டும் சிவாஜி ரசிகர்களை கலங்க வைத்திருந்தார்.

தேவர் மகன்: ஒரு படம் ரிலீஸ் ஆகி 30 வருடங்கள் கழித்தும் பேசப்படுகிறது என்றால் அது சிவாஜி மற்றும் கமல் கூட்டணியில் வெளியான தேவர் மகன் தான். வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை, துண்டு என பெரிய தேவர் கேரக்டரில் வரும் சிவாஜி ஊர் பஞ்சாயத்துகளை பேசும் காட்சிகளாக இருக்கட்டும், மகனை பார்வையாலேயே அடக்கும் காட்சியில் இருக்கட்டும், அப்படியே தென் மாவட்டத்தைச் சேர்ந்த சாமானியன் போல் வாழ்ந்து இருப்பார்.

Also Read:சென்சார் போர்ட் எதிர்ப்பையும் மீறி வெற்றி கண்ட சிவாஜிகணேசன்.. ஒரே படத்தில் மாபெரும் புகழ் பெற்ற 2 ஜாம்பவான்கள்

பூப்பறிக்க வருகிறோம்: சிவாஜிக்கு இந்த படத்தில் தாத்தா கேரக்டர் தான் கொடுத்திருப்பார்கள். ஆனால் இவர் கொஞ்சம் மாடர்ன் தாத்தா. மும்பைக்கு சென்று தன் பேத்தியின் திருமணத்தை நிறுத்தி காதலனுடன் சேர்த்து வைத்துவிட்டு, அதன் பின்னர் தன்னுடைய பேரனின் காதலிக்காக போராடும் தாத்தாவாக நடிப்பில் கலக்கி இருந்தார்.

படிக்காதவன்: இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணனாக சிவாஜி நடித்திருப்பார். ரஜினி பல வருடங்களுக்கு பிறகு தன் அண்ணனை நேரில் பார்க்கும் காட்சி, நீதிமன்றத்தில் நீதிபதியாக உட்கார்ந்து இருக்கும் அண்ணனுக்கு, ரஜினி தான் சிறுவயதில் காணாமல் போன தன்னுடைய தம்பி என தெரிய வரும் பொழுது அந்தக் கண்களிலேயே மொத்த உணர்ச்சியையும் காட்டியிருப்பார்.

Also Read:ரஜினியை பார்த்து வளர்ந்து தற்போது எதிர்த்து நிற்கும் 5 ஹீரோக்கள்.. மாமனாரை ஓரம்கட்ட நினைக்கும் தனுஷ்

- Advertisement -spot_img

Trending News