வியாழக்கிழமை, நவம்பர் 21, 2024

கிரிக்கெட்டில் நடந்த 5 அருவருப்பான சம்பவம்.. இந்திய அணியை கெடுத்து குட்டிச்சுவராக்கிய அசாருதீன்

கால் பந்துக்கு இணையாக அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு கிரிக்கெட். அதிலும் இந்திய நாட்டின் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் அதிகம். கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், கோலி, சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் இந்திய கிரிக்கெட் விளையாட்டு போட்டியை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்றார்கள். இப்பொழுது டெஸ்ட் , ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டி என எல்லாவற்றிலும் இந்தியா முதன்மை அணியாக விளங்கி வருகிறது.

அப்பேர்ப்பட்ட கிரிக்கெட் விளையாட்டில் பல அருவருப்பான விஷயங்கள் நடந்துள்ளது. ஏன் இந்திய அணி வீரர்கள் கூட சில ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் தேவையில்லாத விஷயங்களில் மாட்டி சீரழிந்துள்ளது. கிரிக்கெட்டில் நடைபெற்ற 5 அருவருப்பான விஷயங்களை இதில் பார்க்கலாம்,

நடுவர் ஸ்டீவ் பக்னர்: இந்திய அணி ஒரு முறை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டிகள் விளையாடிக் கொண்டிருந்தது. அப்பொழுது ஸ்டீவ் பக்னர் நிறைய தவறான அவுட் கொடுக்கிறார் என்று இந்திய அணி புகார் அளித்தது . அதன் காரணமாக அடுத்த டெஸ்டில் ஸ்டீவ் பக்னர் நீக்கப்பட்டார் . இது 2008 ஆம் ஆண்டு நடைபெற்றது . அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு மனம் வெறுத்துப்போன ஸ்டீவ் பக்னர் தனது ஓய்வு முடிவை அறிவித்தார் . இது ஒரு அருவருப்பான நிகழ்வு.

சைமன்ஸ், ஹர்பஜன்: ஹர்பஜன்சிங் ஒருமுறை சைமன்சை பார்த்து குரங்கு என்று கூறிவிட்டார். இருவரும் மைதானத்தில் எப்பொழுதுமே மோதிக் கொள்வார்கள். ஒரு முறை பொறுமை இழந்த சைமன்சும், ஹர்பஜனிடம் சண்டைக்கு சென்று விட்டார். இது அப்பொழுது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இன ரீதியாக பார்க்கப்பட்டது.

மார்க் வாக், ஷேன் வார்னே: இருவரும் இந்தியாவில் விளையாடிக் கொண்டிருக்கும் போது காசுக்காக சூதாட்டக்காரர்களிடம் டீல் பேசியுள்ளனர். 1995-96 காலகட்டத்தில் இது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த விஷயத்தை அப்படியே ஆஸ்திரேலியன் கிரிக்கெட் போர்டு மூடி மறைத்தது .

அஜய் ஜடேஜா, முகமது அசாருதீன்: ஆசாருதீன் அணி தலைவராக விளையாடிக் கொண்டிருக்கும் போது இவர்கள் இருவரும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் இவர்களுடைய கிரிக்கெட் கேரியர் முடிவுக்கு வந்தது

பாப் உல்மர்: 2007 ஆம் வருடம் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக பாப் உள்மர் செயல்பட்டு கொண்டிருந்தார்.அப்பொழுது நடைபெற்ற உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி தகுதி சுற்றிலே வெளிவந்தது. இது போர்க்களமாய் அந்நாட்டில் வெடித்தது. அந்த சமயத்தில் திடீரென்று பயிற்சியாளர் பாபுல்மர் தனது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போலீஸ் விசாரணையில அவர் கழுத்து நெறிக்கப்பட்டதற்கான அறிகுறி இருந்தது. ஆனால் அப்படியே இந்த விஷயத்தை மூடி மறைத்து விட்டனர்.

- Advertisement -spot_img

Trending News