திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஜொலிக்காமல் போன 5 வாரிசுகள்.. கிரிக்கெட் ஜாம்பவான் அப்பாக்களின் சொதப்பல் மகன்கள்

கிரிக்கெட் வீரர்களுக்கு எப்பொழுதுமே ஒரு கனவு இருக்கும் அதாவது நமக்குப் பின், நம் பிள்ளைகள் நன்றாக கிரிக்கெட் விளையாடினால் இன்னும் பல மடங்கு நமது பெயர் நிலைத்திருக்கும் என்று விரும்புவார்கள். அப்படி ஆசைப்பட்டு பிள்ளைகளை வளர்த்து ஜொலிக்காமல் போன ஐந்து வாரிசுகள்

ரோகன் கவாஸ்கர்: சுனில் கவாஸ்கரின் மகன்தான் இந்த ரோகன் கவாஸ்கர். இந்தியாவிற்கு சிறந்த ஓபனிங் வீரர் என்று பார்த்தால் அதில் சுனில் கவஸ்கர் பெயர்தான் முதலில் இருக்கும். டெஸ்ட் போட்டிகளில் ஜாம்பவானான கவாஸ்கர் தன் மகனை இந்திய அணிக்குள் கொண்டு வந்தாலும் அவர் சோபிக்க தவறிவிட்டார். இந்திய அணிக்காக வெறும் 11 போட்டிகளில் விளையாடி விட்டு போய்விட்டார்.

ஸ்டூவர்ட் பின்னி: இவர் இந்திய அணியில் விளையாடிய ரோஜர் பின்னியின் வாரிசு. தந்தை தலைசிறந்த வீரர் என்ற பெயர் எடுத்தாலும் ஸ்டூவர்ட் பின்னி இந்திய அணியில் பாஸ் ஆகவில்லை. இந்திய அணிக்காக 14 போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ளார்.

அர்ஜுன் டெண்டுல்கர்: சச்சின் டெண்டுல்கரை பார்த்து நாம் கிரிக்கெட் கற்றுக் கொண்டால், இவர் பையன் சும்மாவா இருப்பார். இவர் தந்தையைப்போல் வரவேண்டும் என்று இன்றுவரை போராடிக்கொண்டு இருக்கிறார். ஆனால் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தபாடில்லை. இவர் வாய்ப்பு இன்றுவரை கேள்விக்குறியாகவே இருக்கிறது.

அனிருத்தா ஸ்ரீகாந்த்: இந்திய அணிக்கு அதிரடி ஆட்டத்தை கற்றுக்கொடுத்தவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் . இவர் பையனுக்கு தன் திறமையை கற்றுக் கொடுத்தாலும் இவரால் இந்திய அணியில் இடம்பெற்று சோபிக்க முடியவில்லை.

மாலி ரிச்சர்ட்: மற்ற நாட்டு வீரர்கள் அஞ்சக்கூடிய வீரர் என்றால் அது மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த விவி ரிச்சர்ட். இவர் வாரிசாகிய மாலி ரிச்சர்ட்,  மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடினாலும் சோபிக்க முடியவில்லை. அந்த அணிக்காக இவர் வெறும் 18 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

Trending News