திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தறி கெட்டு அலைந்த 5 வாரிசு நடிகர்கள்.. பீப் பாடல் மூலம் டி ஆர் ஐ கதறவிட்ட சிம்பு

Actor Simbu: சிபாரிசில், நடிக்கும் வாய்ப்பு பெற்று தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளாமல், தறி கெட்டு கிடைத்த வாய்ப்பை தவற விட்டது மட்டும் அல்லாமல் தன் தந்தையின் மானத்தை வாங்கி வரும் 5 நடிகர்களை பற்றி இங்கு காண்போம்.

சக்தி: பன்முகத் திறமை கொண்டு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் பி வாசு. இவரின் மகன் தான் சக்தி. தன் தந்தையின் இயக்கத்தில் இவர் மேற்கொண்டு படங்கள் இவருக்கு போதிய வரவேற்பை தரவில்லை. ஆனாலும் தன் தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி குடித்துவிட்டு லுங்கி அவர்ந்தது கூட தெரியாமல் நடுரோட்டில் நின்றார். இதை பார்த்த பொதுமக்கள் காரி துப்பாதக் குறையாய் திட்டி அனுப்பினர்.

துருவ் விக்ரம்: எந்த கதாபாத்திரமானாலும் அதற்கு தகுந்தவாறு தன்னை மாற்றி கொண்டு நடிக்கும் வல்லமை கொண்டவர் சியான் விக்ரம். இவரின் மகனான துருவ் விக்ரம் மேற்கொண்ட படங்கள் ஆன ஆதித்ய வர்மா, மகான் போன்ற படங்கள் இவருக்கு போதிய வரவேற்பை பெற்று தரவில்லை. அவ்வாறு இருக்க, தன் ஆடம்பரம் குறையாது, குடித்துவிட்டு அடையார் ஆற்றில் ஆட்டோக்காரர் மீது வண்டியை இடித்து வசமாய் சிக்கி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு: இவர் ஒரு காலகட்டத்தில் சர்ச்சைக்கு பேர் போனவர் எனவே கூறலாம். அந்த அளவிற்கு தன் சக நடிகைகளுடன் இவர் போட்ட ஆட்டம் பாட்டம் குறித்து தெரியாதவர்களே இருக்க முடியாது. அப்பாவிற்கு தப்பாமல் பிள்ளை இருக்கும் என்று சொல்வார்கள் ஆனால் இங்கு ராஜேந்தர் பெண்கள் மீது மரியாதை கொண்டவர். சிம்புவோ அப்படியே அவருக்கு நேர்மாறாய், குடித்து விட்டு இவர் போட்ட பீப் பாடல் சர்ச்சையானது. மேலும் பல நடிகைகளின் சாபத்தை பெற்று மானத்தை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.பி.பி சரண்: சிறந்த இசையமைப்பாளரும், பாடகருமான எஸ்.பி பாலசுப்ரமணியனின் மகன் தான் சரண். தன் தந்தையின் அனுபவத்தால் தமிழ் சினிமாவில் வாய்ப்பு பெற்றவர். அவ்வாறு இருக்க, ஒரு காலகட்டத்தில் சோனா என்னும் நடிகை இவர் மீது மீ டூ வழக்கு பதிவு செய்தார். தன் உறுப்புகளை தொட்டதாகவும் மேலும் தனக்கு பிடிக்காத விஷயத்தில் கட்டாயப்படுத்தியதாகவும் கூறி இவர் மீது வழக்கு பதிவு செய்தார். இது அவரின் தந்தைக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியது.

அதர்வா: 90 காலகட்டத்தில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கி கொண்டவர் முரளி. அவ்வளவு சாப்ட் ஆன கேரக்டர் கொண்டவர். இவரின் பையனா இவர் என கேட்கும் அளவிற்கு குடித்து விட்டு கும்மாளம் அடிப்பது, பெண்களுடன் சகவாசம் கொள்வது போன்ற பல விஷயங்களை மேற்கொண்டு உல்லாசமாக சுத்தக்கூடியவர் என பெயர் எடுத்து தன் தந்தையின் இமேஜை டேமேஜ் செய்து வருகிறார்.

Trending News