6 actors in support character without even knowing their names: ஏதாவது ஒரு வாய்ப்பு மூலம் நமக்கு விடிவுகாலம் பிறந்து விடாதா என்று பலரும் தொடர்ந்து போராடி வருவார்கள். அப்படி சினிமாவிற்குள் நுழைந்து சின்ன சின்ன கதாபாத்திரத்தில் சப்போர்ட் கேரக்டரில் நடிப்பை பிரமாதமாக பலரும் கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் பெயர் கூட தெரியாத அளவிற்கு அவர்களுடைய நடிப்பு பலரிடம் கைதட்டல்களை வாங்கி இருக்கிறது. அப்படிப்பட்ட கேரக்டரில் நடித்துவரும் நடிகர்களை பற்றி பார்க்கலாம்.
ஜெய பிரகாஷ்: இவர் ஆரம்பத்தில் தயாரிப்பாளராக ஒரு சில படங்களில் இவருடைய ஜிஜே சினிமா பேனரில் தயாரித்திருக்கிறார். அதன் பின் மாய கண்ணாடி படத்தின் மூலம் நடிகராக நுழைந்தார். இதனை அடுத்து குணச்சித்திர நடிகராக நடித்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அந்த வகையில் பசங்க, நாடோடிகள், நான் மகான் அல்ல, யுத்தம் செய், மங்காத்தா, மூடர்கூடம், பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் மூலம் பிரபலம் ஆகி இருக்கிறார். ஆனாலும் பலருக்கும் இவருடைய உண்மையான பெயர் என்னவென்று இப்பொழுது வரை தெரியாது.
ஆடுகளம் நரேன்: இவர் 1997 ஆம் ஆண்டு ராமன் அப்துல்லா படத்தில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ஆடுகளம் படத்தின் மூலம் தான் அனைவருக்கும் பரிச்சயமானார். அதன் பின் தொடர்ந்து பல படங்களில் இவருக்கான கதாபாத்திரத்தை சரியாக தேர்ந்தெடுத்து அதில் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். முக்கியமாக ஒரு வருடத்திற்கு 10 படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார்.
Also read: வயிறு குலுங்க சிரிக்க வைத்து பெயர் தெரியாமல் போன 5 காமெடியன்ஸ்.. 100 படங்களுக்கு மேல் நடித்த சாம்ஸ்
அச்யுத் குமார்: இவர் கன்னட சினிமாவில் பல படங்களில் நடித்து நன்கு அறியப்பட்ட நடிகராக வருகிறார். ஆனால் தமிழில் இவருடைய பெயர் யாருக்கும் தெரியாத அளவிற்கு தான் இவருடைய கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. ஆனாலும் இவர் நடித்த கதாபாத்திரங்கள் மக்களிடம் பெரிய அளவில் ரீச் ஆகி இருக்கிறது. அப்படி இவர் நடித்த படங்கள் என்னவென்றால் ரஜினி முருகன் படத்தில் கீர்த்தி சுரேஷின் அப்பாவாக நடித்திருக்கிறார். அதன் பின் விக்ரம் வேதா, ஆதித்யவர்மா, சூரரை போற்று மற்றும் வலிமை படத்தில் அஜித்தின் குடிகார அண்ணனாக கோதண்ட கேரக்டரில் நடித்திருக்கிறார்.
மதுசூதன் ராவ்: இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் அதிகமாக நடித்திருக்கிறார். ஆனாலும் லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம் படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பரிச்சயம் ஆனார். அதன் பின் ஏகப்பட்ட படங்களை நடித்து வந்தாலும் லோகேஷ் இயக்கிய படங்களில் இவருடைய கதாபாத்திரம் இல்லாமல் இருக்காது. அந்த வகையில் லியோ படத்திலும் மிஷ்கினின் மைத்துனர் கேரக்டரில் வந்து நடித்துக் கொடுத்திருக்கிறார்.
அருள் தாஸ்: இவர் நடித்த படங்களான நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ராஜபாட்டை, பாயும் புலி, தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, சூது கவ்வும், தங்க மீன்கள் மற்றும் பாபநாசம் போன்ற படங்களில் துணை கேரக்டரில் வந்து நடித்திருக்கிறார். ஆனாலும் தற்போது வரை இவரை படத்தில் பார்த்தால் இவரின் பெயர் என்னவென்று தெரியாத அளவிற்கு தான் இருக்கிறார்.
பக்ஸ் என்ற பகவதி பெருமாள்: நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும் என்ற படத்தில் பெருமாள் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதன் பின் ஜிகர்தண்டா, பிச்சைக்காரன், 96, துணிவு மற்றும் ரன் பேபி ரன் போன்ற படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து ரசிகர்களுக்கு ஒரு நடிகராக அறிமுகம் ஆகி இருக்கிறார். அந்த வகையில் தொடர்ந்து பல வாய்ப்புகளை பெற்று நடித்து கொண்டு வருகிறார்.
Also read: சேரன் செய்த தரமான சம்பவம்.. லோகேஷ், நெல்சன்லாம் அவர் கிட்ட கத்துக்கோங்க பாஸ்